Type Here to Get Search Results !

சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள்-2023

 


கிரக நிலைகள் :

v  தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது

v  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ)

v  ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி

v  அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு

v  பாக்கிய ஸ்தானத்தில் ராகு

v  தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரக மாற்றங்கள்: 

v  29-03-2023 அன்று சப்தம ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்

v  22-04-2023 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்

v  08-10-2023 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்

v  08-10-2023 அன்று கேது பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்


ராசிக்கு 9-ம் வீடான மேஷத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு சீராக இருக்கும் ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிகப் பணவரவுக்கும் வாய்ப்புண்டு. எதிரிகள் விலகி ஓடுவர். கடன் பிரச்னைகளைத் திட்டமிட்டு முடிப்பீர்கள். தோற்றத்தில் தெளிவு பிறக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். புதிய வீடு வாங்கும் யோகம் வாய்க்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது அதிகரிக்கும்.


ராசிக்கு 5-ம் வீட்டான தனுசில் புதன் சஞ்சாரம் செய்யும்போது இந்த ஆண்டு பிறக்கிறது. எனவே மிக நல்ல பலன்கள் உண்டாகும். வி.ஐ.பிக்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டில் வசதிகளை அதிகரிப்பீர்கள். மனதுக்குப் பிடித்த மின்னணு சாதன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.


சுக்கிரன் மகரத்தில் சஞ்சரிப்ப்தால் செலவுகளும் அதிகரித்தவண்ணம் இருக்கும். வாகனப் பயணங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும்.


வியாபாரத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மே மாதத்தில் வியாபாரத்தை விரிவுப்படுத்த புதிய தொடர்புகள் கிடைக்கும். ஜூன், ஜூலை, நவம்பர் மாதங்களில் எதிர்பாராத திடீர் திருப்பங்களும், அதிரடி லாபங்களும் உண்டாகும். 


உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலதிகாரியின் ஒத்துழைப்பு இனி உண்டு. என்றாலும் அலுவலக ரகசியங்களை வெளியில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய பதிவேடுகளை கவனமாகப் பார்த்துக்கொள்வதன் மூலம் வீண் பழியிலிருந்து தப்பிக்கலாம்.


8, 9-ல் குருபகவான் நன்மையா...? தீமையா...?

22.4.2023 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 8-வது வீடான மீனத்தில் சஞ்சரிப்பதால் செலவுகள் அதிகரித்தவண்ணம் இருக்கும். உங்கள் இரண்டாம் வீடான கன்னியை குருபகவான் பார்ப்பதால் குடும்பத்தில் சுபச் செலவுகள் வந்துபோகும். என்றாலும் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு.


23.4.2023 முதல் வருடம் முடிய ராசிக்கு 9-ம் வீடான மேஷத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தொடங்கும் காரியங்கள் வெற்றியாகும். வெளிவட்டாரத்தில் பதவி, புகழ், கௌரவம் தேடிவரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் களைகட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தம்பதியினருக்கு அது கிடைக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குருவின் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பதால் தங்க ஆபரணங்கள் வாங்கும் யோகங்கள் வாய்க்கும். தடைப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணம் அமையும்.


சனி சஞ்சாரம் சாதகமா...? பாதகமா...?

ஆண்டு தொடங்கும்போது சனிபகவான் 6 ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருந்க்கிறார். இதனால் பிரச்னைகளை சமாளிக்கும் வலிமை கூடும். முதலீடுகள் லாபம் தரும். பிரபலங்கள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தீரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.


29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 7 - ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் செயல்களில் சிறு தடுமாற்றமும், வீண் செலவுகளும் வந்துபோகும். மனதை அலைபாய விடாமல் இருக்க யோகா முதலிய பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.


ராகு - கேது கொடுப்பார்களா..?  கெடுப்பார்களா..?


8.10.2023 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் செயல்கள் வெற்றிகரமாக முடியும் பணவரவும் அதிகரிக்கும். திட்டமிட்டுக் காரியங்களை முடிப்பீர்கள். ராகு பகவான் 9 ம் வீட்டில் நிற்பதால் பணவரவு அதிகமாக இருந்தாலும் சேமிக்க முடியாத அளவுக்கு செலவுகளும் வரிசைகட்டும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் வந்துபோகும். 9.10.2023 முதல் வருடம் முடியும் வரை கேது 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் எதிலும் நிதானம் தேவை. சொற்களில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.

மகம்:  இந்த ஆண்டு சற்று சுறுசுறுப்பு குறையலாம். விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் லாபம் உண்டாகலாம். வியாபாரிகளுக்கு நஷ்டம் இருந்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வளர்ச்சி இருக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். வீடு, நிலம் போன்ற இனங்களில் வழக்கு இருந்தால் அதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள முயல்வது நல்லது. இயந்திரத்தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு ஏற்றம் உண்டாகும்.

பூரம்:  இந்த ஆண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விவசாயிகளுக்கு உற்சாகமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் திருப்தி தரும். நில புலன்களில் ஆதாயம் காணலாம். வியாபாரிகளுக்கு அளவான லாபம் இருக்கும். கவலை வேண்டாம். மகிழ்ச்சி உண்டு, கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும். காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் ஏற்றம் பெறுவர். கலைத்துறையினருக்கு சிறப்பாக இருக்கும். கணவன் - மனைவி உறவு களிப்புடன் விளங்கும்.

உத்திரம் 1ம் பாதம்:  இந்த ஆண்டு அரசு அலுவலர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்பு கிட்டும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் வருவதற்கு கிரக அமைப்பு உதவக்கூடும். விவசாயிகளுக்கு வில்லங்கம் ஏதும் உருவாகாது. வழக்குகளில் வெற்றி வாய்ப்பு பெறவும் ஆதாய சூழ்நிலை உண்டு. இயந்திரப்பணி புரிவோருக்கு ஒரு சிக்கல் உருவாகலாம். இரும்பு, பித்தளை போன்ற உலோகத் தொடர்புடையவர்களுக்கு ஓரிரு பிரச்சினைகள் உருவாகலாம். சனி பகவானைத் தொழுது வந்தால் தொல்லை குறையும்.


சிம்ம ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை :


வீடு மனை வாங்கும் பொழுது, ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது, என்று நிலம் சொத்து சம்பந்தமான எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பூர்வீக சொத்தில் பிரச்சினை ஏற்பட்டால் அதை தாமதப்படுத்துங்கள் அல்லது விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். சிக்கலாக இருக்கும் சொத்து உங்களுக்கு பாதிப்பைத்தான் உண்டாகும்.


ந்த உறவாக இருந்தாலும், குறிப்பாக கணவன் மனைவிக்குள் மூன்றாம் நபர் தலையீட்டை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். ஆடம்பரமான செலவுகள் பக்கம் செல்லவே கூடாது. தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் வேண்டாம்.


கூட்டு வணிகத்தில் இருப்பவர்கள் கணக்கு வழக்குகளை நேர்மையாக வெளிப்படையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.


சட்டத்துக்கு புறம்பாக அல்லது முறைகேடாக எதையும் செய்ய வேண்டாம், தேவையில்லாமல் சட்ட சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.

அரசு சார்ந்த பணிகள், அதிகாரப் பதவிகள், அரசியலில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். அலட்சியமாக இருக்காதீர்கள்.


மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். நிச்சயமாக இதுவரை இருந்ததைவிட நல்ல மதிப்பெண்கள் வாங்குவார்கள். இருப்பினும் தகுதிக்கு மீறிய அல்லது பொருந்தாத உயர் கல்வி ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டாம். பொதுவாக என்ன முயற்சி செய்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போலத்தான் பலன் கிடைக்கும்.


மூட்டு, நரம்பு, கண்கள் ஆகிய ஆகியவை சார்ந்த பிரச்சனை ஏற்படலாம்.

பரிகாரம் - வழிபாடு:  ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையில் உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் துர்க்கையம்மன் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள்.. ஞாயிறுதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.  தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்ய நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் நலமடையும்

அதிர்ஷ்ட திசைகள் :  கிழக்கு, வடக்கு

 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.