விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
கிரக நிலைகள் :
- v தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ)
- v தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி
- v பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு
- v ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு
- v சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் (வ)
- v விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள் :
- v 29-03-2023 அன்று சுக ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்
- v 22-04-2023 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்
- v 08-10-2023 அன்று ராகு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்
- v 08-10-2023 அன்று கேது பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பொது பலன்கள் :
உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன்
அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே ஆண்டு முழுவதுமே நல்ல
வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உங்களுக்கு அணிவகுத்து வந்தபடி இருக்கும்.
நீங்களும் அவற்றை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பதவியில் இருப்பவர்களின்
நட்பு உங்களை பலப்படுத்தும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். செல்வாக்குக் கூடும். புதிய
வேலை தேடும் அன்பர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து வேலை கிடைக்கும்.
சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் போது இந்தப்
புத்தாண்டு பிறக்கிறது. எனவே எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். வெற்றிகள்
குவியும். கடினமான காரியங்களையும் தங்களின் இங்கிதமானப் பேச்சால் முடித்துக்
காட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வீட்டை விரிவுபடுத்திக்
கட்டுவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தமும் உண்டாகும்.
வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். மே மாதம் முதல் குரு
சாதகமில்லாமல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.
யாரையும் நம்பிப் பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால்
ஆதாயமடைவீர்கள். பணியாளர்களிடம் பக்குவமாகப் பேசி வேலைவாங்க வேண்டும்.
உத்தியோகத்தில் அலுவலகம் ஒருநாள் போல் மறுநாள் இருக்காது.
புகழும் சச்சரவும் மாறிமாறி வரும். உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி
வாருங்கள். அதிகாரிகள் சொல்லும் குறைகளை நினைத்து அவசரமுடிவுகள் எடுக்க வேண்டாம்.
சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சலுகைகளும், பதவி உயர்வும்
தாமதமாக வரும். நிதானமாகச் செயல்பட வேண்டிய காலம் இது.
5, 6-ம்
வீடுகளில் குருபகவான் ... நன்மையா...? தீமையா...?
ராசிக்கு 5-ம் வீடான மீனத்தில்
குருபகவான் அமர்ந்திருக்கும் பலன்தரும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது.
ராசிக்கு குருவின் பார்வையும் கிடைக்கிறது. எனவே நினைத்த காரியம் நிறைவேறும்.
எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள்.
சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள்
தேடி வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமணம் எதிர்பார்த்துக்
காத்திருப்பவர்களுக்குத் திருமணமும் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக்
காத்திருப்பவர்களுக்குக் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். செலவுகளைக் கட்டுக்குள்
கொண்டுவருவீர்கள். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். மதிப்பு மரியாதை கூடும்.
கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
23.4.2023 முதல் குருபகவான் 6-ம் வீடான மேஷத்தில்
சென்று மறைவதால் தேவையற்ற மனச் சோர்வு வந்த வண்ணம் இருக்கும். வேலைகளில் ஒரு
இழுபறி நிலை காணப்படும். குடும்பத்தில் தேவையற்ற விவாதங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.
வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும். குல தெய்வ
வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
சனி சஞ்சாரம் சாதகமா...? பாதகமா...?
சனிபகவான் ராசிக்கு 3-வது வீடான மகரத்தில்
சஞ்சாரம் செய்கிறார். இதனால் எதையும் மிக எளிதாக வெல்வீர்கள். சில பிரச்னைகளுக்கு
யதார்த்தத் தீர்வு காண்பீர்கள். வழக்கால் பணம் வரும். எதிர்பார்த்த விலைக்கு
சொத்தை விற்பீர்கள். ஆனால் 29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான்
அதிசாரத்தில் 4-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால்
பணிச்சுமை அதிகரிக்கும். திடீரென பணப்பற்றாக்குறை வந்து நீங்கும்.
குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
ராகு - கேது கொடுப்பார்களா..? கெடுப்பார்களா..?
ராசிக்கு கேது 12-ம் வீட்டிலும் ராகு 6-ம் வீட்டிலும் 8.10.2023 வரை சஞ்சாரம்
செய்கிறார்கள். இதனால் துக்கம் குறையும். எதிரிகளாலும் ஆதாயம் கிடைக்கும்.
சொந்த-பந்தங்களின் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில்
முதல் மரியாதைக் கிடைக்கும். 9.10.2023 முதல் கேது லாப
வீட்டில் அமர்வதால் செல்வாக்கு அதிகரிக்கும். பதவிகள் தேடி வரும். ராகு 5-ம் வீட்டில்
நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.
பிள்ளைகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு
வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது.
ஜென்ம நட்சத்திர பலன்கள்
விசாகம் 4 ம்
பாதம் நட்சத்திரம் :
இந்த ஆண்டு கடன் தொல்லை தீரும். முன்விரோதம் காரணமாக
இருந்துவந்த சில சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் உண்டாகும்.
உடல் நலம் முன்னேற்றமடையும். பொதுவாகச் சங்கடங்கள் பல ஏற்படுமானாலும், அதனைச் சமாளிக்கும்
ஆற்றலும் கிடைக்கும். கொடுக்கல் - வாங்கல் சீராக இருக்கும். குடும்ப நலனில் அக்கறை
செலுத்துங்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்குப் பிரச்சினை
உண்டு. பொறுமையுடன் நடந்து கொண்டு, சமாளிக்க வேண்டியது அவசியம். தொழிலாளர்கள் பணிபுரியும்போது
கவனமாக இருப்பது அவசியம்.
அனுஷம் நட்சத்திரம்:
இந்த ஆண்டு நற்பலன்களும், தீய பலன்களும்
கலந்தவாறு இருந்துவரும். இருந்தாலும் எதையும் சமாளிக்கக் கூடிய வகையிலேயே
தொல்லைகளின் தன்மை இருந்து வரும். மனம்தான் சற்று சஞ்சலத்துக்கு உட்பட நேரும்.
தெய்வப்பணிகளில் ஈடுபட்டு மனோதிடம் பெறமுயலுங்கள். அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன்
இருந்தால் அவப்பெயரிலிருந்து தப்பிக்கலாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள்
தோன்றலாம். சாமர்த்தியமாக அவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலையில்
சரிவு ஏற்பட இடமில்லை.
கேட்டை நட்சத்திரம்:
இந்த ஆண்டு நன்மைகள் உண்டாக வாய்ப்புண்டு. பொதுவாக சில சங்கடங்கள்
இருக்கும். பெரிய மனதோடும் தெய்வபக்தியோடும் இருந்து அவற்றைச் சமாளிக்கவும்.
மனத்தை மட்டும் தளரவிடாதீர்கள், அரசு அலுவலர்களுக்குப்
பிரச்சினை இருக்காது என்றாலும் ஒருவிதமான பீதி இருந்து வரும். சாமர்த்தியமாக
நடந்து கொண்டால் அரசியல்வாதிகள் அவமானப் படக்கூடிய நிலையிலிருந்து தப்பிக்கலாம்.
குடும்பத்தில் சச்சரவுக்கு இடம் அளிக்காதீர்கள். வியாபாரிகளுக்குப் பாதிப்பு
ஏற்படாது. செய்யும் தொழிலில் சிக்கல் வராது. கொடுக்கல்-வாங்கலில் நிதானம்தேவை.
விருச்சிகம் ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை
விருச்சிக ராசியினரைப் பொறுத்தவரை வேலை, வணிகம், பார்ட்னர்ஷிப் என்று, பணி, வருமானம் சார்ந்த
எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால், குடும்பம், வீடு, உறவுகள் ஆகிய
விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சொத்து அல்லது வீடு சார்ந்த சிக்கல்கள்
ஏற்படலாம். அம்மாவின் உடல்நிலையை கவனிக்க வேண்டும். வீண் பேச்சை தவிர்க்க
வேண்டும். முன் கோபத்தை தவிர்க்க வேண்டும். சின்ன சின்ன வார்த்தைகள் கூட பெரிய
முரண்பாட்டை ஏற்படுத்தலாம்.
யாரேனும் உங்களுக்கு தானாக முன்வந்து வழிகாட்டினால், அதை நன்றாக ஆலோசனை
செய்து பின்பற்றுங்கள். நேரடியான பேச்சை பின்பற்றவேண்டும். பிறரின் பேச்சை கேட்டு
முடிவு செய்தால், மிகப்பெரிய சிக்கல்களுக்கு ஆளாவீர்கள்.
மாணவர்கள் நட்புக்காக பெற்றவர்களை, பெரியோர்களை
மதிக்காமல் இருக்கக் கூடாது.
கண், காது, மூக்கு, தொண்டை, பற்கள் சார்ந்த
உபாதைகள் ஏற்படலாம்.
பரிகாரம் - வழிபாடு:
புதியதாக எதை செய்தாலும், குல தெய்வ வழிபாடு
மிகவும் முக்கியம். மலைக்கோயில் முருகனை தரிசித்து வந்தால், தடைகள் விலகும்.
செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு