Type Here to Get Search Results !

ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள்- 2023



கிரகநிலை - ராசியில் செவ்வாய் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

கிரக மாற்றங்கள்: 

  • 29-03-2023 அன்று தொழில் ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் 
  • 22-04-2023 அன்று குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் 
  • 08-10-2023 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் 
  • 08-10-2023 அன்று கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பொதுபலன்கள்

உங்கள் ராசி அதிபதியான சுக்கிர பகவான் ராசிக்கு 9 ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டுபிறப்பதால் இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி தரும் ஆண்டாகவே அமையும். மனதில் இருந்த விரக்தி, கோபம் ஆகியன விலகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பூசல்கள் விலகும். நீண்ட நாள்களாகக் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது கிடைக்கும்.

கடன்களைக் கட்டி முடிப்பீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் நிகழும். வீடு கட்டும்பணியைத் தொடங்குவீர்கள். இந்த ஆண்டு குழந்தைகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். அவர்கள் உங்கள் விருப்பம் போல நடந்துகொள்வார்கள்.

புதன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான 8-ம் வீடான தனுசில் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே வீட்டிலும் வெளியிலும் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகளின் நட்பும் மரியாதையும் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் வாய்க்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவீர்கள். திருப்பணிகளுக்கு உதவுவீர்கள்.

வியாபாரத்தில் ஆண்டு முழுவதுமே அமோகமாக லாபம் இருக்கும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்தும் திட்டம் நல்ல பலனைத் தரும். ஏப்ரல் மாதத்திற்குள் பழைய பாக்கிகள் வசூலாகும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பணி செய்யும் இடத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். உங்கள் கை ஓங்கும். இதுவரை நிலுவையில் இருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை தேடிவரும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து புதிய வேலை தேடிவரும். உங்கள் கோரிக்கைகளை நிர்வாகத்தினர் பரிசீலிர்ப்பார்கள்.


குருபகவான்  பார்வை   நன்மையா...
? தீமையா...?

22.4.2023 வரை குருபகவான் 11-ம் வீட்டிலே வலுவாக அமர்ந்திருப்பதால் பணவரவு அதிகரித்துக் காணப்படும். சகோதர உறவுகள் சாதகமாக இருப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மனதில் இருந்த தாழ்வுமனப்பான்மை விலகும். இதுவரை கண்டும் காணாமலும் இருந்த உறவினர்கள் தேடி வந்து உறவு பாராட்டுவார்கள். மதிப்பு, மரியாதைக் கூடும்.

23.4.2023 முதல் குருபகவான் 12-ம் வீட்டில் அமர்ந்து ஆண்டு இறுதிவரை பலன் தர இருக்கிறார். இதனால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களோடு புதிய நட்பை ஏற்படுத்தும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். யாரையும் நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம். வீடு, மனை விற்பது வாங்குவது லாபகரமாக முடிவடையும். இறைவழிபாடுகள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியன சிறக்கும்.

சனி சஞ்சாரம் சாதகமா...? பாதகமா...?

இந்தாண்டு தொடக்கத்தில் சனிபகவான் தனது சொந்த வீடான மகரத்திலேயே அமர்ந்திருக்கும் வேளையில் இந்த ஆண்டு பிறக்கிறது. ராசிக்கு 9-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வதால் நல்ல பலன்கள் உண்டாகும். வழக்கில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும். 29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 10 - ம் வீடான கும்ப ராசியில் அமர்ந்து பலன் தர இருக்கிறார. இந்தக் கால கட்டத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்ப்புகள் தோன்றி மறையும். நிதானம் தேவை.

ராகு - கேது கொடுப்பார்களா..? கெடுப்பார்களா..?

8.10.2023 வரை ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 12-ல் சஞ்சாரம் செய்துவரும் ராகுவால் மனம் அடிக்கடி கலங்கும். தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மறையும். 9.10.2023 முதல் ராகு 11-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் திடீர் பணவரவு உண்டாகும். வேற்றுமதம் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களால் நன்மைகள் அதிகரிக்கும். எதையும் முடிக்கும் வல்லமை மனதில் பிறக்கும். கேது 5 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் சிறு தாமதம் ஏற்பட்டு முடியும். பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கிருத்திகை 2, 3, 4 ம் பாதங்கள்: இந்த ஆண்டு உங்களுடைய வேலைகள் தடங்கலின்றி நடக்க வாய்ப்புண்டு. முதலாளி - தொழிலாளி உறவு சலசலப்புக்குள்ளாகலாம். விவசாயிகளுக்கு கஷ்டம் ஏதும் உருவாகாது. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சிறு சிறு கஷ்டங்கள் எந்த உருவிலாவது வரலாம். சமாளித்து விடுவீர்கள். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோருக்கு உரிய கவுரவம் கிடைக்கத் தடையிருக்காது. காதல் விவகாரம் தற்போது வேண்டாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கடிதப்போக்குவரத்தில் கண்ணியம் காப்பது அவசியம்.

ரோகினி: இந்த ஆண்டு பல கஷ்டங்களும் உண்டாகும். ஆனால் இந்தக் கஷ்டங்களை குரு அருளால் நீங்கள் இலகுவாக சமாளிக்கவும் இயலும். கொடுக்கல் - வாங்கலில் நிதானம் இருக்கட்டும். விவசாயிகளுக்கு முன்விரோதம் காரணமாக ஒரு வழக்கு ஏற்படலாம். இதனை சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள முயலுங்கள். வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. பொறியியல், விஞ்ஞானம் கணிதம் போன்ற துறைகளில் உள்ளோருக்கு உற்சாகம் தரக்கூடிய நேரமாக இருக்கும். கலைத்துறையில் சாதகமான போக்கு காணப்படும். இயந்திரத் தொழிலில் சம்பந்தமுடையோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்: இந்த ஆண்டு கலைத்துறைச் சம்பந்தப்பட்ட பணிகளில் அவ்வப்போது சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டு பிறகு சீரடைய வாய்ப்புண்டு. பொருளாதார சங்கடம் இருக்காது. இயந்திரப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்றம் ஏற்படும். காவல் - ராணுவத்தினருக்கு ஆதாயம் உண்டு. நண்பர்கள் நல்லவர்களை இனம்கண்டு பழகினால் தொல்லை இராது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கலைத்துறையில் கலகலப்பான சூழ்நிலை உருவாகுமானாலும் சங்கடங்களும் இருந்து வரும். பொதுவாக பணக்கஷ்டம் அந்தஸ்துக் குறைவு போன்றவை ஏற்படாது. குடும்பத்தில் லஷ்மிகரம் நிலைத்திருக்கும்.

ரிஷப ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

உங்களுடைய பொறுப்புகளை நீங்கள் மற்றவரிடம் ஒப்படைக்க கூடாது. திட்டமிட்டு செயல்பட வேண்டும். நேரம் தவறாமை என்பது ரிஷப ராசியினருக்கு மிக மிக முக்கியம். பொதுவாகவே ரிஷப ராசியினர் கொஞ்சம் சோம்பேறியாக இருப்பதால் கடைசி நிமிடத்தில் பதற்றமாக விரைவாக, அதே நேரத்தில் சரியாக வேலை செய்தாலும் கூட, அதை இந்த முறை தவிர்ப்பது நல்லது. எந்த விஷயமாக இருந்தாலும் கவனம் சிதறாமல் பணியாற்றுவது முக்கியம்.

உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும், குறிப்பாக செரிமான சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு குழந்தை பாக்கியத்தைக் குறிக்கும் கிரகமான புதன் எட்டில், மறைவு ராசியில் சஞ்சரிப்பதால் குழந்தை பெற திட்டமிட்டு இருக்கும் தம்பதிகள் முதல் ஓரிரு மாதங்களில் தேவையில்லாத செலவுகளை தவிர்க்கலாம். அதாவது செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விஷயங்களை சில வாரங்களுக்குத் தள்ளிப் போடலாம்.

பரிகாரம் - வழிபாடு: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு, காலபைரவர் வழிபாடு மற்றும் வாரந்தோறும் நவகிரகங்களில் குரு வழிபாடு மேன்மை தரும்முடிந்த வரை அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். 

அதிர்ஷ்ட திசைகள்:  கிழக்கு, வடக்கு




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.