துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
கிரக நிலைகள் :
·
ராசியில் கேது
·
தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன்,
புதன்(வ)
·
சுக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி
·
ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு
·
சப்தம ஸ்தானத்தில் ராகு
· அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள் :
· 29-03-2023 அன்று பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்
·
22-04-2023 அன்று குரு பகவான் சப்தம
ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்
· 08-10-2023 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்
· 08-10-2023 அன்று கேது பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பொது பலன்கள் :
ராசிக்கு 7-ம் வீடான மேஷ ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் இந்த ஆண்டு முழுவதும் பல நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாக இருக்கிறது. இதுவரை பிரகாசிக்காமல் இருந்த தங்களின் தனித்திறமைகள் தற்போது வெளிப்படும். முகத்தில் தேஜஸ் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அழகு, இளமைக் கூடும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தேடிவரும். பணவரவு அதிகரிக்கும்.
சுக்கிரனும், புதனும் தனுசு ராசியில் வீற்றிருக்கும் நேரத்தில் 2023-ம் புத்தாண்டு பிறப்பதால் பணம் நிறைய வரும். புதிய மின்னணு சாதனங்கள்
வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வாய்ப்புகள் உருவாகும்.
குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். நன்கு அறிமுகமானவரை பங்குதாரர்களாக சேர்க்கப் பாருங்கள்.
உத்தியோகத்தில் சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரியிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். சக ஊழியர்களிடம் நீக்குபோக்காக நடந்துகொள்ளுங்கள். இடமாற்றங்கள் வரும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கி கைக்கு வரும்.
6 மற்றும் 7-ம் வீட்டில் குருபகவான் ... நன்மையா...? தீமையா...?
22.4.2023 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீடான மீனத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் எப்போதும் மனதில் ஒரு கவலை இருந்தவண்ணம் இருக்கும். வேலை தொடர்பான டென்ஷன் வந்து வந்து போகும். ஆரோக்கியக் குறைபாடுகள் வந்து சரியாகும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்து முடிக்க வேண்டியிருக்கும். என்றாலும் கடனில் ஒரு பகுதியை அடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
23.4.2023 முதல் குருபகவான் 7-ம் வீடான மேஷத்தில் அமர்வது பல நல்ல பலன்களைத் தரும். வாழ்வில் அனைத்துப் பிரச்னைகளும் படிப்படியாகக் குறையும். நல்ல திருப்பங்கள் உண்டாகும். உற்சாகமாகப் பணிசெய்வீர்கள். குடும்பத்தில் இருந்த வருத்தங்கள் நீங்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பழைய சொந்தங்கள் தேடி வரும். சகோதரர் உதவுவார். குருவின் பார்வை ராசிக்குக் கிடைப்பதால் தங்க நகை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.
ராகு - கேது கொடுப்பார்களா..? கெடுப்பார்களா..?
8.10.2023 வரை ராசியிலேயே கேதுவும் 7-ம் வீட்டில் ராகுவும் சஞ்சரிப்பதால் தலைவலி, தலைசுற்றல்,செரிமானக் கோளாறு போன்ற சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் வந்த வண்ணம் இருக்கும். 9.10.2023 முதல் ராசியை விட்டுக் கேது விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். முகம் மலர்ந்து காணப்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சனி
சஞ்சாரம் சாதகமா...? பாதகமா...?
சுகஸ்தானமான 4-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வதால் பயணங்களின் போது பாதுகாப்பு தேவை. வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். தேவையற்ற பழக்கங்களை விட்டுவிடுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 5 ம் வீடான கும்பத்தில் அதிசாரமாகப் பெயர்ச்சி ஆவதால் பிள்ளைகளால் செலவு, மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். அதேவேளை இதுவரை இருந்த குழப்பங்கள் விலகிப் புதிய நம்பிக்கை உண்டாகும்.
ஜென்ம நட்சத்திரப் பலன்கள் :
சித்திரை 3, 4 பாதங்கள்:
இந்த ஆண்டு தொழிலில் மிகுந்த அக்கறையுடன் இருப்பது அவசியம். வியாபாரிகளுக்குப் அனுகூலமாக இருக்கும். வியாபாரிகளுக்கு சிறு நஷ்டம் இருக்குமானாலும் பின்னர் ஆதாயமாக இருக்கும். விவசாயிகளுக்குப் பிரச்சினை உண்டாகாது. கலைத்துறை சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் பிரச்சினைகள் உருவாகாது போக இடமுண்டு. உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். மனதில் சில குறை உண்டாகலாம். அதை சரி செய்து விடுவீர்கள். பணக்கஷ்டம் இருக்காது. ஆனால், உழைப்பு அதிகமாக இருக்கும். அலைச்சல் இருக்கும்
சுவாதி :
இந்த ஆண்டு உடல்நலம் சீராக இருக்கும். மிகவும் உன்னதமான நேரம் நடந்து கொண்டிருக்கிறது. திருமணம், மகப்பேறு போன்ற பாக்கியங்கள் உண்டாகலாம். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலையும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும். விவசாயிகளுக்குப் பிரச்சினை ஏதும் உருவாகாது. என்றாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இழிச்சொல்லுக்கு உள்ளாக நேரலாம். எச்சரிக்கை தேவை.
விசாகம் 1, 2, 3
பாதங்கள் :
இந்த ஆண்டு தம்பதியரிடையே மகிழ்ச்சி மேலோங்கும். தகாத காரியங்களைச் செய்யச் சொல்லி உங்களைத் தடுமாற்றத்துக்கு உள்ளாக்கும் நிலைமை வரலாம் எச்சரிக்கை. அன்றாடப் பணிகளில் சிரத்தையுடன் செயலாற்றுங்கள். தப்பித்துக் கொள்ளலாம். தொழிலாளர்களுக்கு விசேஷ நற்பலன்கள் உண்டாகும். திருமணம் போன்ற நற்காரியங்கள் நிகழவும் வாய்ப்புண்டு. கலைத்துறை சம்பந்தப்பட்ட பணிகள் சுறுசுறுப்படையும். கணவன் மனைவி உறவு களிப்புடன் விளங்கும்.
துலாம் ராசியினர் கவனமாக
இருக்க வேண்டியவை
உங்களுக்கு வேலை உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைத்தாலும், யாரையும் விளையாட்டாகக் கூட மட்டம் தட்டி பேசாதீர்கள், ஏனென்றால் அது உங்களையே மீண்டும் தாக்கலாம். மற்றவர்கள் எப்போதோ செய்த குற்றத்தை நீங்கள் எப்போது பெரிதுபடுத்தி பேசினால் அது உங்களுக்கு சில காலம் கழித்து பிரச்சனையாக மாறும். அவசரமாக எதையும் செய்வதை தவிர்க்க வேண்டும். எவ்வளவுதான் பண வரவு திருப்திகரமாகவும் இருந்தாலுமே தேவையில்லாத செலவுகளை தவிர்த்து விடுவது நல்லது. பணம் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
நரம்பு தலைவலி பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம் - வழிபாடு: வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் அல்லது மகாலட்சுமி தாயார் வழிபாடு செய்வது ஆண்டு முழுக்க நிம்மதியாக இருப்பதற்கு உதவும். வெள்ளிக்கிழமை தோறும் குலதெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு