மீனம் ( பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரக நிலைகள் :
- ராசியில் குரு
- தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு
- தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ)
- அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது
- தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ)
- லாப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள் :
- 29-03-2023 அன்று விரைய ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்
- 22-04-2023 அன்று குரு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்
- 08-10-2023 அன்று ராகு பகவான் ராசிக்கு மாறுகிறார்
- 08-10-2023 அன்று கேது பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்
பொது பலன்கள் :
உங்கள் லாப வீடான மகரத்தில் சுக்கிரன்
அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே பணப்புழக்கம்
அதிகரிக்கும். சொந்த வீடு, மனை, வாகனம் வாங்கும் கனவுகள் நனவாகும். திட்டமிட்டு சில காரியங்களை
முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் களைகட்டும். ஆபரணங்கள் வாங்கும்
யோகம் உண்டாகும். பங்குச்சந்தையில் ஓரளவுக்கு லாபம் உண்டு. வாழ்க்கைத்துணையுடன்
இருந்த வருத்தங்கள் நீங்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.
தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திர பகவான் சஞ்சாரம் செய்யும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவுக் குறைவிருக்காது. உற்சாகம் அதிகரிக்கும். முகத்தில் பொலிவு கூடும். ஆரோக்கியமும் மேம்படும்.
வியாபாரத்தில் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகளை
சலுகைகள் அறிவித்து விற்றுத் தீர்ப்பீர்கள். வருவாய் கூடும். திறமையான
வேலையாட்களால் கிடைப்பார்கள். அவர்களால் நிம்மதி கிடைக்கும். புதுக் கிளைகள்
தொடங்குவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கண்ஸ்டரக்ஷன், பவர் புராஜெக்ட்
வகைகளால் லாபமடைவீர்கள். பெரிய வியாபாரிகளின் நட்பு கிடைக்கும்.
உத்தியோகத்தில் ஏப்ரல் மாதம் வரை
பணிச்சுமை அதிகமாகவே இருக்கும். மே மாதம் முதல் மரியாதைக் கூடும். உயரதிகாரிகளின்
நம்பிக்கையைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுக்காகப் பரிந்து பேசுவீர்கள். அதனால்
உங்கள் மீது நல்ல அபிப்ராயம் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பதவி
உயர்வும் கிடைக்கும்.
ஜென்ம
ராசி மற்றும் 2 ம் வீட்டில்
குருபகவான்... நன்மையா...? தீமையா...?
22.4.2023 வரை குருபகவான் ஜன்ம குரு
ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் பணிச்சுமை அதிகமாகவே இருக்கும். சில நேரங்களில்
தேவையற்ற பயம் மனதில் தோன்றி மறையும். கடந்த காலத்தை நினைத்துப் புலம்புவீர்கள்.
சிலருக்கு வாயுக்கோளாறு, நெஞ்சு எரிச்சல் ஆகியன வந்து நீங்கும். மனதில் தாழ்வு மனப்பான்மை
அதிகரிக்கும். யாருக்காகவும் வாக்குறுதிகள் தரவேண்டாம். சொந்த-பந்தங்களின்
அன்புத்தொல்லை அதிகரிக்கும். திடீர் பயணங்களும், செலவுகளும் இருக்கும். பயணத்தின் போது
கவனம் தேவை. யாரையும் நம்பிப் பெரிய முதலீடுகளில் இறங்க வேண்டாம்.
23.4.2023 முதல் உங்களின் தன குடும்ப
வாக்குஸ் தானமான மேஷத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உடல் மற்றும் மனம்
புத்துணர்ச்சி அடையும். கோபம் குறையும். தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுவதை
விடுவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுப
நிகழ்ச்சிகள் களைகட்டும். வீடு அல்லது மனை வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
செலவுகளும் கட்டுக்குள் வரும். கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். நல்ல சம்பளத்தில்
புதிய வேலை கிடைக்க வாய்ப்புண்டு. இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தங்க
நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
சனி சஞ்சாரம் சாதகமா...? பாதகமா...?
ராசிக்கு 11-ம் வீட்டில் சனிபகவான்
தொடர்வது யோக பலன்களைத் தரும். சுபநிகழ்ச்சிகளில் உங்களுக்குத் தனி மரியாதை
கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் அடைப்பீர்கள். வழக்கில்
சாதகமாகத் தீர்ப்பு வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தூரத்து சொந்த-பந்தங்கள்
மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
29.3.2023 முதல் 23.8.2023 வரை
சனிபகவான் அதிசாரத்தில் 12 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் வீண்
செலவுகள், கடன் பிரச்னை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும் போதும் சாலையை கடக்கும்
போதும் கவனம் தேவை.
ராகு - கேது கொடுப்பார்களா..?
கெடுப்பார்களா..?
8.10.2023 வரை 2-ம் வீட்டில் ராகுவும், 8-ம் வீட்டில்
கேதுவும் சஞ்சாரம் செய்வதால் ஒரு விரக்தி மனநிலை அடிக்கடித் தோன்றும். யார் மீதும்
எதன் மீதும் நம்பிக்கை இல்லாத தன்மை ஏற்படும். விரையங்கள் அதிகரிக்கும். கடன்
பிரச்னை குறித்துக் கவலைப்படுவீர்கள்.
9.10.2023 முதல் வருடம் முடியும்வரை
ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற படபடப்பு வந்த் போகும்.
குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். தேவையற்ற சந்தேகத்தை விட்டுவிடுங்கள். வீண்
சந்தேகத்தை விலக்கி கொள்ளுங்கள். மனதில் நம்பிக்கை வளர்த்துக்கொள்ள நல்ல நூல்களை
வாசியுங்கள். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்.
பூரட்டாதி 4ம்
பாதம்:
இந்த ஆண்டு குடும் நலம், மனநலம் இரண்டுமே
சீராக அமையும். தகுதிவாய்ந்த அரசு அலுவலர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இடமுண்டு.
கலைத்துறை பணிகள் சிறப்படையும். குடும்ப நலம் பெருகும். ஏழைகளுக்கு உதவுங்கள், தெய்வப்பணிகளில்
ஈடுபடுங்கள். கணிதத்துறை வல்லுநர்கள், மருத்துவத்துறை மேலோர்கள், விவசாயத்துறை
விற்பனர்கள், வியாபாரத் துறை சமர்த்தர்கள் அனைவரும் பாராட்டு பெற வாய்ப்பு
பெறுவீர்கள்.
உத்திரட்டாதி:
இந்த ஆண்டு எல்லாம் விருத்தியாகும்.
தொழில் சிறப்படையும். முதலாளி - தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும். பணவரவு சீராக
அமையும். வெளிப்படையாகவும், உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும். மற்றவர்கள்
பாராட்டத்தக்க வகையில் உங்கள் வேலை அமைந்திருக்கும். வீரியமுடன் காரியங்ளைச்
செய்வீர்கள். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குழந்தைக்காக
காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ரேவதி:
இந்த ஆண்டு வீடு, மனை வாங்குவதில்
இருந்த பிரச்சினைகள் சரியாகி புது வீடு கட்டுவீர்கள். பணப்பிரச்சினைகள் தீர்ந்து
பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் திறமைகள் பல வழிகளிலும் வெளிப்படும்.
உங்கள் வேலை நுணுக்கத்தை கண்டு மற்றவர்கள் உங்களை பாராட்டுவார்கள். குடும்பத்தில்
இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி சந்தோஷமான சூழல் உருவாகும். குழந்தை பாக்கியம்
இல்லாதவர்களுக்கு இந்த வருடம் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மீன ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை
இரண்டு விஷயங்களில் மீன ராசிக்காரர்கள்
மிக மிக கவனமாக இருக்க வேண்டும். முதல் விஷயம் ஆரோக்கியம் மற்றும் இரண்டாவது
செலவுகள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது முறையாக ஏழரை சனி தொடங்கும்
போது, வயதானவர்கள் தங்களுடைய உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த
வேண்டும்.
புதிய முதலீடுகளை தொடக்கத்திலேயே
தவிர்த்துவிடலாம். வெளிநாடு சம்பந்தப்பட்ட வாய்ப்புகள் தேடி வரும். ஆனால் வெளிநாடு
சம்பந்தப்பட்ட அல்லது வெளி மாநிலம் சம்பந்தப்பட்ட தொழில், கல்வி, வேலை என்று
எதுவாக இருந்தாலும் ஆவணங்களை முறையாக வைத்திருப்பது மிக மிக அவசியம்.
கேமிங், போட்டி, யூக சம்பந்தமான வணிகங்கள், பந்தயம்
ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி இருக்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய
அளவுக்கு நஷ்டத்தை சந்திப்பீர்கள்.
வழக்குகள், வீடு மனை சொத்து
சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் நிதானமாக யோசித்து சிந்தித்து செயல்படுங்கள்.
அதற்கு உரியவர்களின் ஆலோசனையை கேளுங்கள். இல்லையென்றால் நீங்கள் அலைச்சலுக்கும்
அலைஅழிப்புக்கும் உள்ளாவீர்கள்.
கடன், வழக்கு ஏதாவது இருந்தால் அவசரமாக
தடாலடியாக முடிவெடுக்க வேண்டாம். தெரியாமல் யாராவது கூறுகிறார்கள் என்று பெரிய
தொகையை செலவழிக்க வேண்டாம்.
உங்களுக்கு பண விரையம் ஏற்படக்கூடிய
நிலை இருக்கிறது. எனவே பணம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலுமே கவனமாக இருக்க
வேண்டும்.
பரிகாரம் - வழிபாடு: கண்கள், சுவாச உறுப்பு, ஹார்மோன் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி மற்றும் குருபகவான் வழிபாடு மற்றும் அம்பாள் வழிபாடு ஆகியவை மேன்மையைத் தரும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு