காஞ்சிபுரம், ஏப்.11:
பங்குனி மாத வளர்பிறை கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திரர் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
![]() |
வேல், சேவல் கொடியுடன் காட்சியளித்த மகா பெரியவர் அதிஷ்டானம் |
பங்குனி மாத வளர்பிறை கிருத்திகையையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திரர் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
கிருத்திகையையொட்டி மகா பெரியவர் அதிஷ்டானம் தங்கக்கிரீடம், தங்க ஹஸ்தம் மற்றும் வேல், சேவல் கொடியுடனும், ஜெயேந்திரர் அதிஷ்டானம் மயில் தோகைகளாலும், வெள்ளி வேலுடனும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
![]() |
மயில் தோகை அலங்காரத்தில் காட்சியளித்த |
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை ஸ்ரீ மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தொடக்கி வைத்தார். சிறப்பு பூஜை நிகழ்வில் ஸ்ரீ மடத்தின் செயலாளர் செல்லா. விஸ்வநாத சாஸ்திரி உட்பட மடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.