குரோதி வருடம் ஆனி 24, திங்கட்கிழமை, July 08, 2024 பஞ்சாங்கம்
· தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, ஆனி 24 ↑
· நாள் - மேல் நோக்கு நாள்
· பிறை - வளர்பிறை
திதி
- சுக்ல பக்ஷ திருதியை [ Tithi Vridhi ] - Jul 08 04:59 AM – Jul 09 06:09 AM
நட்சத்திரம்
- பூசம் - Jul 07 04:48 AM – Jul 08 06:02 AM
- ஆயில்யம் - Jul 08 06:02 AM – Jul 09 07:52 AM
கரணம்
- சைதுளை - Jul 08 05:00 AM – Jul 08 05:30 PM
- கரசை - Jul 08 05:30 PM – Jul 09 06:09 AM
யோகம்
- வஜ்ரம் - Jul 08 02:12 AM – Jul 09 02:06 AM
- ஸித்தி - Jul 09 02:06 AM – Jul 10 02:26 AM
வாரம்
திங்கட்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
- சூரியோதயம் - 5:52 AM
- சூரியஸ்தமம் - 6:35 PM
- சந்திரௌதயம் - Jul 08 7:44 AM
- சந்திராஸ்தமனம் - Jul 08 8:47 PM
அசுபமான காலம்
- இராகு - 7:27 AM – 9:03 AM
- எமகண்டம் - 10:38 AM – 12:13 PM
- குளிகை - 1:49 PM – 3:24 PM
- துரமுஹுர்த்தம் - 12:39 PM – 01:30 PM, 03:12 PM – 04:03 PM
- தியாஜ்யம் - 07:48 PM – 09:31 PM
சுபமான காலம்
- அபிஜித் காலம் - 11:48 AM – 12:39 PM
- அமிர்த காலம் - None
- பிரம்மா முகூர்த்தம் - 04:16 AM – 05:04 AM
ஆனந்ததி யோகம்
- பிரபாபதி Upto - 06:02 AM
- சௌமியம்
வாரசூலை
- சூலம் - கிழக்கு
- பரிகாரம் - தயிர்
சூர்யா ராசி
- சூரியன் மிதுனம் ராசியில்
சந்திர ராசி
- கடகம் (முழு தினம்)
சந்திர மாதம் / ஆண்டு
- அமாந்த முறை - ஆஷாடம்
- பூர்ணிமாந்த முறை - ஆஷாடம்
- விக்கிரம ஆண்டு - 2081, பிங்கள
- சக ஆண்டு - 1946, குரோதி
- சக ஆண்டு (தேசிய காலண்டர்) - ஆஷாடம் 17, 1946
தமிழ் யோகம்
- சித்த யோகம் Upto - 06:02 AM
- சித்த யோகம்
Auspicious Yogas
- சர்வார்த்த சித்தி யோகம் - Jul 09 05:52 AM - Jul 09 07:52 AM (Ashlesha and Tuesday)
- ரவி புஷ்ய யோகம் - Jul 07 05:51 AM - Jul 08 05:52 AM (Pushya and Sunday)
- சர்வார்த்த சித்தி யோகம் - Jul 07 05:51 AM - Jul 08 06:02 AM (Pushya and Sunday)
சந்திராஷ்டமம்
மூலம், பூராடம்
பண்டிகைகள் மற்றும் விரதங்கள்
மேஷம்
எதிலும் திருப்தியற்ற சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். சகோதர வகையில் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்
கனிவான பேச்சுக்கள் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். காது தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உழைப்பு மேம்படும் நாள்.
கிருத்திகை : நம்பிக்கை மேம்படும்.
ரோகிணி : பிரச்சனைகள் நீங்கும்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் குறையும்.
மிதுனம்
பெரியோர்களின் ஆலோசனைகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
மிருகசீரிஷம் : அனுபவங்கள் ஏற்படும்.
திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
கடகம்
ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். சில அனுபவங்களின் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களின் தனிபட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபார பணிகள் சுமாராக நடைபெறும். அரசு சார்ந்த காரியங்களில் சிந்தித்துச் செயல்படவும். சாதனை நிறைந்த நாள்.
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அறிமுகம் நிறைந்த நாள்.
மகம் : புரிதல் உண்டாகும்.
பூரம் : பயணங்கள் கைகூடும்.
உத்திரம் : நம்பிக்கை மேம்படும்.
கன்னி
கனிவான பேச்சுக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிலும் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். முயற்சிகளில் புதிய வியூகங்கள் கைகொடுக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். அனுகூலம் நிறைந்த நாள்.
உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.
அஸ்தம் : மதிப்பு மேம்படும்.
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
துலாம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் கைகூடும். அதிரடியான சில செயல்பாடுகளின் மூலம் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். பணி நிமித்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூகப் பணிகளில் அலைச்சல் உண்டாகும். நேர்மை வெளிப்படும் நாள்.
சித்திரை : எதிர்பார்ப்புகள் கைகூடும்.
சுவாதி : செலவுகளை குறைக்கவும்.
விசாகம் : அலைச்சல் உண்டாகும்.
விருச்சிகம்
எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வெளியூர் வர்த்தகத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். சிந்தனை மேம்படும் நாள்.
விசாகம் : வரவுகள் கிடைக்கும்.
அனுஷம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
வாழ்க்கை துணையுடன் அனுசரித்துச் செல்லவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். வர்த்தக செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். பயணங்களின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
உத்திராடம் : நெருக்கடியான நாள்.
மகரம்
சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். முயற்சிக்குண்டான மதிப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். ஆன்மிக பணிகளில் புரிதல் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
உத்திராடம் : பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்
குடும்பத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் அடைவீர்கள். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பாடங்களில் இருந்துவந்த குழப்பம் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். ஜெயம் நிறைந்த நாள்.
அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.
சதயம் : ஆதாயகரமான நாள்.
பூரட்டாதி : குழப்பங்கள் குறையும்.
மீனம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் அறிமுகம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.
பூரட்டாதி : ஒற்றுமை பிறக்கும்.
உத்திரட்டாதி : அறிமுகங்கள் கிடைக்கும்.
ரேவதி : ஆர்வம் மேம்படும்.