ஜூலை கடைசி வாரமான 22 முதல் 28 வரையிலான இந்த வாரத்தில் ரிஷபத்தில் குரு, செவ்வாய் சேர்க்கையும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை நடக்கிறது.

கிரகங்களின் சேர்க்கை, அமைப்பானது மேஷம் முதல் மீனம் ராசி வரையில் உள்ள நபர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் இந்த வாரத்தில் நடக்கும் என தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி மற்றும் சாதனைகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வேலையில் பதவி அல்லது சம்பள உயர்வுக்காகக் காத்திருக்க வேண்டியது இருக்கும்.
வார தொடக்கத்தில் தந்தையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்களின் சோம்பேறி தனத்தை தவிர்ப்பது அவசியம். பணியிடத்தில் உங்களின் வேலைகளை முடிப்பதில் கவனமும், வேகமும் தேவை.
வணிகஸ்தர்கள் உங்களின் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் கூடுதல் சிந்தனை தேவைப்படும்.
இந்த வாரத்தில் உங்களின் தடைப்பட்ட வேலைகளை நண்பர்களின் உதவியால் நிறைவேற்ற முடியும். வாரத்தின் நடுவில் நீங்கள் நினைத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைச் செலுத்து கவனம் செலுத்துங்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
- அதிர்ஷ்ட எண்: 10
ரிஷபம்
ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் பிறரின் பேச்சுக்கு மயங்கி செயல்பட வேண்டாம். உங்களின் இலக்கை விட்டு கவனம் சிதற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் அதிக வேலை பண்ணுவது ஏற்படும். புதிய பொறுப்புக்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வியாபாரிகளுக்கு ஒரு அளவு சாதகமாக அமையும். உங்களின் முதலீடுகள் மூலம் பணப்பலன் பெறுவீர்கள்.
காதல், திருமண வாழ்க்கையில் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இந்த வார இறுதியில் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
- அதிர்ஷ்ட நிறம்: நீலம்
- அதிர்ஷ்ட எண்: 3
மிதுனம்
மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் நிதி நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். அதனால் கூடுதல் கவனத்துடன் பணத்தை செலவிடவும். இந்த வாரம் முழுவதும் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக கவலை ஏற்படும்.
தந்தையின் உடல்நிலையில் அக்கறை தேவை. உங்கள் பணிகளை முடிப்பதில் கண்ணன் கருத்துமாகச் செயல்படவும். இலக்கை அடைவதில் தாமதம் ஏற்படும்.
கல்வித் தொடர்பான முயற்சிகளில் ஆதாயம் அடைவீர்கள். கமிஷன் வேலை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். காதல், திருமண உறவில் துணையின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
- அதிர்ஷ்ட எண்: 7
கடகம்
கடக ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் பல விதத்தில் நன்மைகள் நடக்கும். இந்த வார்த்தையில் சோம்பலை விட்டு சுறுசுறுப்புடன் செயல்பட, உங்களின் கனவு நனவாகும். தொழில், வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற நற்பலன் கிடைக்கும். நல்ல லாபம் பெறலாம்.
வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகளில், அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம். வாரத்தின் மத்தியில் பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் வந்து சேரும். அன்புக்குரியவர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். திருமணம் மற்றும் காதல் உறவுகள் வலுவடையும்.
- அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 2
சிம்மம்
சிம்ம ராசி சேர்ந்தவர்களுக்கு எந்த வாரத்தில் ஆரோக்கியம் மற்றும் உங்கள் உறவுகளை கவனித்துக் கொள்வது அவசியம். பருவ கால நோய்கள் பிரச்சனையை தர வாய்ப்புள்ளது.
வாரத் தொடக்கத்தில் பணியிடத்தில் சில பொறுப்புகள் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வாரத்தில் தேவையற்ற விஷயங்களுக்காக அதிக பணம் செலவிட வாய்ப்புள்ளது. அதனால் எச்சரிக்கையுடன் உங்கள் பணத்தை கையாளவும். காதல் உறவில் புரிதல் சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்க்கையில் சில மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சை கட்டுப்படுத்துவது அவசியம். துணையின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை
- அதிர்ஷ்ட எண்: 9
கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் தங்களின் திட்டமிட்ட வேலையில் நல்ல வெற்றி பெறலாம். இதுவரை பணியிடத்தில் நல்லது வியாபாரத்திலிருந்த பிரச்சனைகள் நீங்க எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும்.
உங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான வெற்றியை பெறுவீர்கள். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. சிலரின் மனம் புண்படுத்துவீர்கள்.
காதல் ஒரு வில் கவனமாக நடந்து கொள்ளவும். மனைவியின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். மாணவர்கள் வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும்.
- அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 16
துலாம்
துலாம் ராசி சேர்ந்தவர்கள் இந்த வாரத்தில் பலவிதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் நலம் விரும்புகிறேன் ஆதரவால் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிக்கலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி, ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகள் வழங்க வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கல்வி தொடர்பான விஷயத்தில் மாணவர்களுக்கு நல்ல செய்தி தேடுகிறோம். வியாபாரத்தில் லாபம் பெருகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
- அதிர்ஷ்ட எண்: 18
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். எந்த ஒரு ஒப்பந்தத்திலும் அதை முழுவதுமாக, கவனமாக படிப்பது அவசியம்.
உங்கள் வேலைகளை கவனமாகவும், முழுமையாகவும் செய்து முடிப்பது அவசியம். இல்லையெனில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். வாரத்தின் நடுவில் பணிகளை முடிப்பதில் கவனம் தேவை. சொத்து, நிலம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.
உங்கள் உறவுகளை புறக்கணிக்காதீர்கள். கல்வி தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. காதல் விவாகரத்தில் கவனமாக முடிவு எடுக்கவும்.
- அதிர்ஷ்ட நிறம்: ஊதா
- அதிர்ஷ்ட எண்: 8
தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உங்களின் பெரும்பாலான முயற்சிகள் வெற்றி பெறும். சோம்பேறித்தனத்தை விடுத்து முயற்சி செய்ய எதிலும் வெற்றி பெற்றிடுவீர்கள்.
இந்த வார்த்தை நேரம் மேலாண்மை மற்றும் வேலையில் அர்ப்பணிப்பு அவசியம். காதல் உறவில் வெற்றி கிடைக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு வாழ்க்கைத் துணை அமையும்.
போட்டி, தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை.
- அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
- அதிர்ஷ்ட எண்: 4
மகரம்
மகர ராசியை சேர்ந்தவர்கள் இந்த வாரத்தில் பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் அதை தைரியத்துடன் எதிர் கொள்ள முயலவும். பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படவும்.
உங்களின் பெரிய முயற்சிகள் வேகம் எடுக்கும். எந்த ஒரு பெரிய திட்டத்திலும் முதலீடு செய்வதில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்குச் சிறப்பான நேரமாக இருக்கும்.
காதல் உறவே கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். கல்வியில் கூடுதல் உழைப்பு தேவை.
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
- அதிர்ஷ்ட எண்: 12
கும்பம்
கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் சமூக சேவை மற்றும் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனமாக செயல்படவும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்தவும். கடினமான சூழ்நிலையில் யோசித்துப் பேசவும்.
உங்கள் பொறுப்புகளையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்ற கூடுதல் நுழைப்பு தேவைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வாரம் முழுக்க பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் விஷயத்தில் மன வருத்தம் ஏற்படலாம். சர்ச்சைக்குரிய விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவும்.
- அதிர்ஷ்ட நிறம்: வானம் நீலம்
- அதிர்ஷ்ட எண்: 5
மீனம்
மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களின் பயணங்களில் இனிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் வேலையை பாராட்டுவார்கள். எழுத்து துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
காதல் உறவு வலுவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பருவ கால நோய்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும்..
- அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
- அதிர்ஷ்ட எண்: 12