Type Here to Get Search Results !

உத்தரமேரூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் துரியோதணன் படுகளம் நிகழ்ச்சி


படவிளக்கம் : உத்தரமேரூர் திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை பார்வையிட்டசுற்றுப்புற கிராமத்தினர்


காஞ்சிபுரம், ஜூலை 2:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் திரௌபதியம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவின் நிறைவையொட்டி செவ்வாய்க்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் பழமை வாயந்த திரௌபதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டுக்கான விழா கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இதன் தொடர்ச்சியாக தினசரி ஆலயத்தின் முன்பாக அர்ஜூனன் தபசு,பாஞ்சாலி தேவி திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு,அபிமன்யு சண்டை,கண்ணன் தூது உள்ளிட்ட மகாபாரத இதிகாச சொற்பொழிவு நடைபெற்றது.


சொற்பொழிவின் நிறைவு நாளாக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்வையொட்டி களிமண்ணால் மிகப்பெரிய துரியோதனன் உருவம் வடிவமைக்கப்பட்ட அதில் பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.


உத்தரமேரூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளான பொதுமக்கள் நிகழ்வை கண்டு களித்து சுவாமி தரிசனமும் செய்தனர்.ஆலயத்தின் முன்பாக இரவு தீ மிதித் திருவிழாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.