Type Here to Get Search Results !

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சஹஸ்ர தீப அலங்கார சேவைக் காட்சி - காஞ்சி சங்கராசாரியார் சுவாமிகள் தொடக்கி வைத்தார்





காஞ்சிபுரம், செப்.19:


காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வசந்த மண்டபத்தில் வியாழக்கிழமை சஹஸ்ர தீப அலங்கார சேவைக் காட்சியை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குத்து ளக்கேற்றி தொடக்கி வைத்தார்.


மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் சஹஸ்ர தீப அலங்கார சேவைக் காட்சி தொடங்கப்பட்டது.


இதனையொட்டி கோயில் வசந்த மண்டப வளாகத்தில் 1008 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டும், மண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.


காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சஹஸ்ர தீப சேவைக் காட்சியை தொடக்கி வைத்து பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா அருளியதை வாசித்தார். இதனைத் தொடர்ந்து மூலவர் காமாட்சி அம்பிகைக்கு சிறப்பு தீபாராதனைகளையும் நடத்தினார்.

உலக நன்மை,குடும்ப நலன் வேண்டி விருப்பமுள்ள பக்தர்கள் சஹஸ்ர தீப அலங்கார சேவைக்காட்சியை செய்ய ஆலய நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.


தொடக்க விழாவில் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையின் துணை வேந்தர் வைத்திய சுப்பிரமணியம்,மும்பை கல்வியாளர் சங்கர்,காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன், தொல்லியல் ஆய்வாளர் ஜவஹர்பாபு ஆகியோர் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர்,மேலாளர் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, கோயில் மணியக்காரர் சூரியநாராயணன் மற்றும் கோயில் ஸ்தானீகர்கள், பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.