காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பொய்கையாழ்வார் சபை ராமானுஜ கூடத்தில் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீநிவாசன் திருக்கல்யாணம் சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் விளக்கொளிப்பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது பொய்கையாழ்வார் சபை ராமானுஜ கூடம். இக்கூடத்தில் ஸ்ரீநிவாசனுக்கும்,ஸ்ரீ பத்மாவதிக்கும் நாமசங்கீர்த்தன முறைப்படி திருக்கல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக அதிகாலையில் சுப்ரபாதம் நிகழ்வும்,பின்னர் கல்யாண சங்கல்பமும் தொடங்கி திருக்கல்யாணம் நடைபெற்றது. மதியம் ஆஞ்சநேயர் உற்சவத்தையொட்டி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.
திருக்கல்யாணத்தை யொட்டி பிரேம்குமார் பாகவதர் குழுவினரால் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை பொய்கையாழ்வார் சபை ராமானுஜ கூட நிர்வாகிகள் செய்திருந்தனர்.