காஞ்சிபுரம், அக்.2:
பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அன்னை ரேணுகாம்பாள் ஆலயத்தில் புதன்கிழமை நவராத்திரி திருவிழாவின் தொடக்கத்தையொட்டி அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பெரியகாஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு தெருவில் அமைந்துள்ளது அன்னை ரேணுகாம்பாள் திருக்கோயில். இக்கோயிலில் நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு மூலவர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவினையொட்டி நர்த்தகி நாட்டியாலயா பள்ளி மாணவியரின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.நவராத்திரி திருவிழாவையொட்டி தினசரி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் அம்மன் தினசரி வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பதுடன் தினசரி இரவு பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகளும், விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர்.