காஞ்சிபுரம், அக்.4:
காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் நவராத்திரித் திருவிழாவின் 2 வது நாள் நிகழ்வாக வெள்ளிக்கிழமை உற்சவர் அழகிய சிங்கப் பெருமாள் ராமர் பட்டாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும்,பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளையும் உடையது காஞ்சிபுரத்தில் உள்ள அழகிய சிங்கப் பெருமாள் கோயில்.இக்கோயில் நவராத்திரித் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
2 வது நாள் நிகழ்வாக ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் அழகிய சிங்கப் பெருமாள் வில், அம்பு ஏந்தி ராமர் பட்டாபிஷேக அலங்காரத்தில் கம்பீரமாக காட்சியளித்தார்.பெருமாள் பாண்டியன் கொண்டை அணிந்தும், நீல நிற பட்டு உடுத்திய அலங்காரத்திலும் அமிர்தவல்லித் தாயார் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.