சனி ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2.5 ஆண்டுகள் தங்கி, அதன் பரிமாணங்களை வழங்கும். ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களை அளிக்கக்கூடியவர் தான் சனி பகவான். இதனாலேயே இவரை நீதிமான் என்று அழைப்பர். இது தனிநபர், குடும்பம் மற்றும் சமூகத்தில் முக்கிய மாற்றங்களை உருவாக்கும்.
சனி-சுக்கிரன் சேர்க்கை
தற்போது சனி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் டிசம்பர் 28 ஆம் தேதி இரவு 11:48 மணிக்கு சனி பகவான் இருக்கும் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். ஏற்கனவே கும்பத்தில் சனி இருப்பதால், சுக்கிரனின் வருகையால், கும்ப ராசியில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது.
நட்புறவு
ஜோதிடத்தில் சனிக்கும், சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு உள்ளது. எனவே இந்த சேர்க்கையானது மிகவும் மங்களகரமானது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இச்சேர்க்கை மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த சேர்க்கை நிகழ்வதால், 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அருமையாக, அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
2025 புத்தாண்டின் தொடக்கமே அமர்க்களமாய் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்
சனி, சுக்கிர சேர்க்கையானது மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரவுள்ளது. அதுவும் இந்த சேர்க்கை 11 ஆவது வீட்டில் நிகழ்வதால், வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. தொழில் ரிதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளப்படும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். முதலீடுகளில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரியில் இருந்து நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
ரிஷபம்
கும்பத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை, ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்.
இந்த நேரத்தில், நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். அல்லது ஏற்கனவே உள்ள வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தலைமைப்பண்பு அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புளளது.
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல பலன்களைத் தரும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன், சனி சேர்க்கை நல்ல பலன்களை அளிக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறலாம்.
உங்கள் தந்தையின் சொத்திலிருந்து சில பெரிய நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். புதிய வேலைகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நன்மை கிடைக்கும்.
மகரம்
சுக்கிரன் சனி சேர்க்கை, மகர ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் முன்னேற புதிய வாய்ப்புகளை அளிக்கும். சுக்கிரனின் அனுகூலமான செல்வாக்கின் காரணமாக, உங்கள் மகிழ்ச்சி மற்றும் வசதிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வழிகளில் வருமானம் அதிகரிக்கும். இதனால் வங்கி இருப்பு அதிகரிக்கும். நிதி ஆதாயம் காரணமாக பணப் பற்றாக்குறை நீங்கும். உங்கள் செலவுகள் குறையாவிட்டாலும், நீங்கள் முன்பை விட அதிக பணத்தை சேமிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் சமூகத்தில் உயரும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- சனி பகவானின் அருள் பெற
'நீலாஞ்ஜன ஸமா பாஸம், ரவிபுத்ரம் யமாக் ரஜம்; சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி ஸனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். இது தவிர ஏழை எளியவர்களுக்கு உதவும் நபர்களை சனி பகவான் காத்து ரஷிக்கிறார்.
- சுக்கிரனின் பரிபூரண அருள் பெற
'ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் ஸஹ ஶுக்ராய நம:' என்ற சுக்ர பீஜ் மந்திரத்தை தினமும் ஜபிக்கலாம். சுக்ரா மந்திரம் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கான தடைகளை அகற்றி வாழ்வில் அனைத்து வசதிகளையும் அளிக்கின்றது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள், பல்வேறு ஊடகங்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பொதுவான தகவல்களை மட்டும் வழங்குவதாகும். இது ஒருவரின் தனிப்பட்ட முடிவுகளுக்கான ஆலோசனை அல்லது சான்றாக கருதப்படக்கூடாது. இதற்கு Way2Astro எந்த வகையிலும் பொறுப்பேற்காது.