வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நவகிரகங்களில் ராகு, கேது நிழல் கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களும் மற்ற கிரகங்களைப் போல் நேர்பாதையில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கும்.
இவ்விரு கிரகங்களும் 18 மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றும். முக்கியமாக மற்ற கிரகங்களைப் போல இவ்விரு கிரகங்களுக்கும் சொந்த ராசி ஏதும் இல்லை. தற்போது ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் ராகு மற்றும் கேதுவின் ராசி மாற்றங்கள் நிகழவுள்ளன. அதுவும் 2025 ஆம் ஆண்டின் மே 18 ஆம் தேதி இந்த பெயர்ச்சி நிகழவுள்ளது. அப்போது ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் செல்லவுள்ளனர்.
இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், இவ்விரு கிரகங்களின் ஆசிகளை பெறும் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, செல்வம் பெருகி, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- ராகு: திருஷ்டியை அல்லது அசுர சக்திகளை குறிக்கின்றது.
- கேது: ராகுவிற்கு நேர்மாறு புள்ளியாக செயல்படுகிறது மற்றும் ஆன்மீக வளர்ச்சியுடன் தொடர்புடையது.
இப்போது 2025 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்பதைக் காண்போம் :
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்படும். மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் பலவிதமான நற்செய்திகளைப் பெறுவார்கள். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புக்கள் கிடைக்கலாம். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
2025 ஆம் ஆண்டில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். நிலம், சொத்து போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். செல்வம் பெருகும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
2025-ல் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் நிறைய நன்கைமளைப் பெறுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். தொழிலில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மீனம்
2025-ல் நடக்கும் ராகு கேது பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவிதமான நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுப செலவுகள் அதிகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
வெளியூர் அல்லது வெளிநாட்டு பயண்ங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டு ராகு கேதுவின் ஆசியால் மிகவும் அற்புதமாக இருக்கும்.
பெயர்ச்சி நேரத்தில் செய்ய வேண்டியவை:
- பிரார்த்தனை: நவகிரகங்களில் உள்ள தோஷங்களை நிவர்த்தி செய்ய பரிகார வழிபாடுகள்.
- பரிகார ஹோமங்கள்: ராகு-கேது மந்திர ஹோமங்கள் செய்வது பல நன்மைகளை அளிக்கும்.
- தானங்கள்: கருப்பு தானியங்கள், புலி கம்பளம், பசு பகவானுக்கு கோவில் தானம் ஆகியவை நன்மை தரும்.
- கடவுள் வழிபாடு: நாகபத்ராகாளி, ராகு பகவான் கோவில் வழிபாடு சிறப்பானது.
பொதுவான விளைவுகள்:
- ராகு: அவசரமான மாற்றங்கள், சவால்கள், மற்றும் வெளிநாட்டு தொடர்புகளை அதிகரிக்கும்.
- கேது: ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் கடந்தகால கர்ம விளைவுகளை நிறைவேற்றும்.
ராகு மற்றும் கேது கிரகங்களின் அனுகூலத்தை பெறவும், தோஷங்களை நிவர்த்தி செய்யவும், அந்த கிரகங்களுக்கான மந்திரங்களை ஜபிப்பது மிகவும் பயனுள்ளதாகும். கீழே ராகு மற்றும் கேதுவுக்கான மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:
ராகு மந்திரம்
🔹 ஆரம்ப மந்திரம்
"ஓம் ப்ராஂ ப்ரீம் ப்ரௌம் சஹ ராகவே நமஹ"
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிப்பது சிறந்தது.
🔹 பாரம்பரிய மந்திரம்
"அர்தகாயம் மஹாவீர்யம் சந்திராதித்ய விமர்தனம்
சிம்ஹிகா கர்ப சம்ஜாதம் தம் ராகும் ப்ரணமாம்யஹம்"
கேது மந்திரம்
🔹 ஆரம்ப மந்திரம்
"ஓம் ஸ்ராஂ ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ கேதவே நமஹ"
இந்த மந்திரத்தையும் 108 முறை ஜபிக்கலாம்.
🔹 பாரம்பரிய மந்திரம்
"பலாச புஷ்ப சங்காசம் தாரகாக்ர மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்திரகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்"
சிறப்புகள் :
இந்த மந்திரங்களை புதன்கிழமைகளில் அல்லது திங்கள்கிழமைகளில் ஜபிக்கலாம்.
நாகபாஷணத்திலான அல்லது ஏழு நாகத்துடன் கூடிய நாகராஜரின் வழிபாடு இந்த மந்திர ஜபத்திற்கு கூடுதல் பலன்களைத் தரும்.
மந்திரம் ஜபிக்கும் முன் தியானம் செய்து மனதை சாந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இதை தொடர்ந்து செய்வதால் ராகு மற்றும் கேது தோஷங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறைந்து, நல்ல அனுகூலங்கள் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள், பல்வேறு ஊடகங்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பொதுவான தகவல்களை மட்டும் வழங்குவதாகும். இது ஒருவரின் தனிப்பட்ட முடிவுகளுக்கான ஆலோசனை அல்லது சான்றாக கருதப்படக்கூடாது. இதற்கு Way2Astro எந்த வகையிலும் பொறுப்பேற்காது.