கனவில் பாம்பு வருவது பல்வேறு அர்த்தங்களைத் தரக்கூடியது, இது உள்ளார்ந்த பயம், மறைவு உணர்வுகள், அல்லது சில நேரங்களில் சுப பலன்களையும் குறிக்கக்கூடும். இதன் பொருள் கனவின் சூழல், பாம்பின் செயல், மற்றும் உங்கள் எண்ணங்களின் அடிப்படையில் மாறுபடலாம்.
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கனவு வருவது இயல்பு. அது நல்லதாகவும் இருக்கலாம், கேட்டதாகவும் இருக்கலாம். நம்மில் பலருக்கு பாம்பு குறித்த கனவு வந்திருக்கும். ஆனால், அதற்கு அர்த்தம் என்ன என்பது பலருக்கு தெரிந்திருக்காது. ஜோதிடத்தின்படி, யாருக்கு ராகுதிசை ராகுபுக்தி நடைபெறுகிறதோ, அவர்களின் கனவில் பாம்பு வரும் என கூறப்படுகிறது.
அதுமட்டும் அல்ல, பாம்பு பாலியல் குறியீடாகவும் கருதப்படுகிறது. அதே போல, ஆண்களுடனும் பாம்பு ஒப்பிடப்படுகிறது. அதாவது, ஒரு பாம்பு உங்கள் படுக்கையில் விழுவது போல கனவு கண்டால் அது பாலியல் சிற்றின்பத்தின் அடையாளமாக காணப்படுகிறது. நமக்கு பாம்பு குறித்த கனவு வந்தால், என்ன அர்த்தம் என்பதை இங்கே காணலாம்.
இயல்பாக நமது கனவில் பாம்பு வந்தால், நமது குலதெய்வ வழிபாடு விடுபட்டுள்ளதாக காலம் காலமாக கூறப்படுகிறது. அதாவது, குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து உங்களுக்கு வழிபாடு செய்ய நினைவு படுத்துகிறது. குல தெய்வத்திற்கு ஏதாவது நேத்திக்கடன் செய்ய வேண்டி இருந்தால் அதை நிறைவேற்றவும்.
பாம்பு கனவு பலன்கள்:
ஆதிக்கம் மற்றும் செல்வாக்கு: சில சமயங்களில், பாம்பு செல்வாக்கை அல்லது ஆற்றலைக் குறிக்கும். குறிப்பாக நீல, கருப்பு போன்ற வண்ணங்களில் பாம்பு வந்தால், இது உங்களுக்கு வாழ்வில் ஒரு புதிய பாதையை அல்லது ஒரு உயர்வு வாய்ப்பை தரும்.
கெட்ட சக்திகளின் நீக்கம்: உங்கள் கனவில் பாம்பு கொன்றால் அல்லது பாம்புகளை நீக்கினால், உங்கள் வாழ்வில் எதிரிகளைக் கடக்கும் சக்தி உங்களுக்கு இருக்கிறது என்று இது குறிப்பிடும்.
உடல் நலம் மற்றும் குணம்: பாம்பு விஷத்தன்மை கொண்டது என்பதால், பாம்பு கனவு உடல் ஆரோக்கியத்தை குறிப்பதாகக் கொள்ளலாம், குறிப்பாக, பச்சை அல்லது வெள்ளை பாம்பு வந்தால், இது குணமாகும் நேரத்தை அல்லது புதிய ஆரோக்கிய வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் குறிக்கலாம்.
துரதிர்ஷ்டம்: சில நேரங்களில் கனவில் பாம்பு வருவது உங்களைச் சுற்றி சில கெட்ட சக்திகள் இருப்பதை அறிவுறுத்துகிறது. இது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடிய சில ஆளுமைகளை அல்லது சூழ்நிலைகளை காட்டுகிறது.
பாம்பை கையில் பிடிப்பதை போன்ற கனவு :
பாம்பை கையில் பிடிப்பதை போன்ற கனவு உங்களுக்கு வந்தால், சுபமாக கருதப்படும். இதன் அர்த்தம், உங்களுக்கு தனலாபம் உண்டாகப்போகிறது என அர்த்தம்.
கனவில் பாம்பு உங்களை விரட்டினால் :
கனவில் பாம்பு உங்களை விரட்டினால் வறுமை ஏற்படப்போகிறது என்று அர்த்தம். எனவே, இதை சுலபமாக எடுக்க வேண்டாம். அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும். அதுவே, ஒரு பாம்பு உங்கள் காலைச்சுற்றி பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பகவான் பிடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது.
கனவில் பாம்பு உங்களை கடித்தால் :
கனவில் பாம்பு நம்மை கடித்தால், அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. ஏனென்றால், இவ்வளவு நாள் நம்மை பிடித்திருந்த பீடை விளக்கப்போகிறது என அர்த்தம். அத்துடன், நமது கஷ்டம் மற்றும் வறுமை நம்மை விட்டு விளக்கப்போகிறது என்று அர்த்தம். தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு தீர்வு கிடைக்கும்.
வீட்டுக்குள் இருந்து பாம்பு வெளியே சென்றால் :
ஒரு பாம்பு உங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டு, எதுவும் செய்யாமல் அமைதியாக வெளியே செல்வதை போல நீங்கள் கனவு கண்டால், நீங்கள் வேண்டிய நேத்திக்கடனை விரைவில் செலுத்த வேண்டும் என்பது பொருள். இதுவே, அந்த பாம்பு உங்களின் தலைக்கு மேல் குடை பிடிப்பது போல நின்றால், தெய்வத்தின் அனுசரணை மற்றும் பார்வை உங்கள் குடும்பத்தின் மீது உள்ளது என கருதப்படுகிறது.
ஏறிச்செல்வது போல கனவு வந்தால் :
பாம்பு யார் மீதாவது ஏறிச்செல்வது போல கனவு வந்தால், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் போகிறதென்று அர்த்தம். அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
கனவில் பாம்பை கொன்றால் :
உங்கள் கனவில் நீங்கள் ஒரு பாம்பை கொன்றாலோ அல்லது பாம்பு இறந்து கிடப்பதை கண்டாலோ உங்களுக்கு வர இருக்கும் ஆபத்து விலகிவிட்டது என அர்த்தம். இருப்பினும் அனைத்து விஷயத்திலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. உங்களுக்கு ஏற்பட்டிருந்த வியாதி குணமாகும் என்றும் பொருள்படும். ஆக மொத்தத்தில் இது சுபமான விஷயம்.
நல்ல பாம்பு கனவில் வந்தால் :
ஜோடியாக இல்லாமல், ஒற்றை நல்ல பாம்பு உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு விரோதிகளால் தொல்லை உண்டாகப்போகிறது என கூறப்படுகிறது. சொத்து மற்றும் நில பிரச்சனைகள் இருந்தால் அதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இதுவே, உங்கள் கனவில் நல்ல பாம்பு ஜோடியாக வந்தால், அது நல்ல சகுனம். உங்களுக்கு சாதகமான செயல்கள் நடக்கும். நேரமும் காலமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
கனவில் பாம்பை கையில் பிடித்தல் :
பாம்பை கையில் பிடிப்பதை போன்ற கனவு உங்களுக்கு வந்தால், சுபமாக கருதப்படும். இதன் அர்த்தம், உங்களுக்கு தனலாபம் உண்டாகப்போகிறது என அர்த்தம். செல்வா செழிப்பு பெரும். இதுவே பாம்பு உங்களை, விடாமல் துரத்தினால் உங்களுக்கு வறுமை உண்டாகப்போகிறது என அர்த்தம்.
இரவில் முதல் ஜாமத்தில் காணும் கனவு ஒரு வருஷத்திலும், 2 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 3 மாதத்திலும், 3 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 1 மாதத்திலும், சூரியோதயத்தின் போது காணும் கனவு 10 தினங்களிலும் பலிக்கும் என கூறப்படுகிறது. கனவு என்பது நம் ஆழ்மனது சிந்தனை... கெட்ட கனவு கண்டால் இறைவனை தியானித்துவிட்டு தூங்குவது நல்லது.
இவற்றை தொடர்ந்து கனவு காண நேர்ந்தால் அல்லது கனவின் பின்னர் நீங்கள் மனஅமைதியற்ற நிலையில் இருந்தால், ஆன்மிக முறைகளை பின்பற்றுவது, அல்லது இந்த பயங்களை கையாளுவது நல்லது.