சின்ன காஞ்சிபுரம் புஷ்ப வள்ளி தாயார் சமேத ஸ்ரீஅஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் திறப்பது வழக்கமாக செயல்பட்டது இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு நடைபெற்று இந்த ஆண்டு சொர்க்கவாசல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது ரூபாய் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் பரமபத வாசல் வெள்ளி தகடு பொருத்தப்பட்டு பல்வேறு சுவாமிகள் உருவம் பொறிக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு பரமபதவாசல் அதிகாலை 5.10 மணிக்கு திறக்க பட்டது .
உற்சவர் பெருமாள் ரத்தினஅங்கி சேவையில் பரமபதம் வாசல் வழியாக வந்து கோவிலில் வளம் வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார் பக்தர்கள் புதியதாக புணரமைக்கப்பட்ட பரமபத வாசல் வழியாக நீண்ட வரிசையில் சென்று கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர் இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்..
வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது விழா ஏற்பாட்டினை அறங்காவலர் குழு தலைவர் கே பி சந்தோஷ் குமார் தலைமையில் மற்றும் நிர்வாக குழுவினரால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கோவிலை சுற்றி பல வகை வண்ணம் மலர்களால் பந்தல் அமைக்கப்பட்டு கோவில் உள்ளே பல்வேறு பழ வகைகளை கொண்டு பந்தல் அமைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் எஸ்கேபி சீனிவாசன் கவுன்சிலர் கார்த்திக் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்