இக் கோவிலின் முகப்பில் 16 அடி மண்டபத்தின் மீது, 21 அடி உயரத்தில் விஸ்வரூப தரிசனத்தில் தான்தோன்றீஸ்வரர் சிவபெருமான் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார்.
கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, விஸ்வரூப தான்தோன்றீஸ்வரர் திருவுருவ சிலை புதுப்பிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து பாலாபிஷேகம் செய்யும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த பாலாபிஷேக விழாவில், சிவ வாத்தியங்கள் முழங்க, ட்ரோன் கருவி மூலம் 21 லிட்டர் பாலை தெளித்து அபிஷேகம் செய்யப்பட்டது. ட்ரோன் மூலம் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றதை திரளான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து வணங்கி வழிபட்டனர்.
பாலாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.