காஞ்சிபுரம், ஜூலை 4:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகேயுள்ள மேல்பேரமநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது கங்கையம்மன் மற்றும் பொழுதியம்மன் ஆலயம். கடந்த ஜூலை முதல் தேதி செவ்வாய்க்கிழமை கங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் விழாவையொட்டி காப்புக்கட்டுதல் உற்சவம், மதியம் கூழ்வார்த்தல் நிகழ்வும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை பொழுதியம்மனுக்கு ஊரணிப் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெற்றது.
இதனையொட்டி இரவு பொழுதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏற்பாடுகளை மேல்பேரமநல்லூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
.png)
