ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் பழமையான ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 24வது ஆண்டு ஆடித்திருவிழாநடந்தது.விழாவையொட்டி காலை மூலவர் ஆதி காமாட்சி அம்மனுக்கு மஹா அபிேஷகம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டது.மேற்கு ராஜ வீதி செங்கழுநீரோடை வீதி வழியாகயாக கோவிலை சென்றடைந்ததும் அம்மனுக்கு பாலாபிேஷகம் செய்யப்பட்டது.
சிறப்பு சந்தனகாப்பு அலங்காரத்தில் ஆதி காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.