Type Here to Get Search Results !

நாளைய (14-07-2025) ராசி பலன்கள்

  

 

மேஷம்


பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வியாபார இடமாற்றம் குறித்த முயற்சிகள் கைகூடும். பணி சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.

பரணி : தாமதங்கள் விலகும்.

கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.

 

 

 

ரிஷபம்


தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உருவாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். போட்டி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : பொறுமை வேண்டும்.

ரோகிணி : செல்வாக்கு உயரும்.

மிருகசீரிஷம் : வேறுபாடுகள் மறையும்.

 

மிதுனம்


அதிகார பதவியில் இருப்பவர்களால் நன்மைகள் ஏற்படும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். பயணம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். கவலை விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : நன்மையான நாள்.

திருவாதிரை : விவேகத்துடன் செயல்படவும்.

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

 

கடகம்


பிள்ளைகள் மூலமும் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்

புனர்பூசம் : செலவுகள் ஏற்படும்.

பூசம் : சிந்தித்து செயல்படவும்.

ஆயில்யம் : மாற்றமான நாள்.

 

சிம்மம்


கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். தடைப்பட்ட பணிகள் முடியும். உடல் தோற்றப்பொழிவு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். எதிர்பாராத சில திருப்பங்கள் பிறக்கும்.  பொறுமை வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

மகம் : நெருக்கம் ஏற்படும்.

பூரம் : முடிவுகளில் கவனம்.

உத்திரம் : திருப்பங்கள் பிறக்கும்.

 

கன்னி


இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். பயணங்களின் போது அலைபேசிகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்களுடன் அதிக நேரம் உரையாடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. இன்பம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

உத்திரம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

அஸ்தம் : துரிதம் ஏற்படும்.

சித்திரை : மாற்றம் உண்டாகும்.

 

 

 

துலாம்


சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விளையாட்டான பேச்சுக்களை தவிர்ப்பது பகைமையை குறைக்கும். மனதளவில் வித்தியாசமான கற்பனைகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.

சுவாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

விசாகம் : கற்பனைகள் அதிகரிக்கும்.

 

விருச்சிகம்


உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் ஆதாயம் மேம்படும். பயணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார ரீதியாக ஒத்துழைப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆதரவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : புரிதல் உண்டாகும்.

அனுஷம் : ஆதாயம் மேம்படும்.

கேட்டை : வாய்ப்புகள் கைகூடும்.

 

தனுசு


கருத்துக்களுக்கு மதிப்புகள் உயரும். அரசு வழியில் உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வித்தியாசமான அணுகுமுறைகளால் நினைத்ததை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செலவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மூலம் : மதிப்புகள் உயரும்.

பூராடம் : சிந்தனைகள் பிறக்கும்.

உத்திராடம் : ஆதரவான நாள்.

 

 

மகரம்


கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைப்பட்ட பணிகள் முடியும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். அலுவலகத்தில் உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திராடம் : பணிகள் முடியும்.

திருவோணம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

அவிட்டம் : மதிப்புகள் கிடைக்கும்.

 

கும்பம்


எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். எடுத்துச் செல்லும் இடங்களில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால் மனவருத்தங்கள் நேரிடும். வியாபார போட்டிகள் அதிகரிக்கும். பணி சார்ந்த ரகசியங்களில் விவேகம் வேண்டும். எதிர்பார்க்க சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். துணிவு பிறக்கும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.

சதயம் : போட்டிகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.

 

 

மீனம்


சுப செலவுகளால் கையிருப்பு குறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். சச்சரவான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். ஆடம்பரமான பொருள்கள் மீது ஈர்ப்புகள் உண்டாகும். எதிர்ப்புகள் மறையும் நாள். 

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

பூரட்டாதி : கையிருப்பு குறையும்.

உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.

ரேவதி : ஈர்ப்புகள் உண்டாகும். 

 

 

 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.