காஞ்சிபுரம், ஜூலை 13:
இக்கோயில் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை சிறப்பாக தொடங்கப்பட்டன. ஏ.வி. சதீஷ்குமார் சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற, முதல் நாளில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, மகா பூர்ணாகுதி தீபாராதனைக்குப் பின்னர், யாகசாலையிலிருந்து புனித நீர் குடங்கள் கோபுரம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், விழா ஏற்பாடுகளை காலூர் மற்றும் விச்சந்தாங்கல் கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் நேர்த்தியாக செய்திருந்தனர்.