காஞ்சிபுரம், ஜூலை 11:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே மண்ணூரில் அமைந்துள்ள யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா கிளை சார்பில் குரு பூர்ணிமா விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூரில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் கிளை செயல்பட்டு வருகிறது.இக்கிளையில் குருபூர்ணிமா நாளையொட்டி குருதேவர் ஸ்ரீ பரம ஹம்ச யோகானந்தருடைய திருஉருவப்படம் அலங்கரிக்கப்பட்டு ஆசிரமத்தில் பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரம்மச்சாரி நிரஞ்ஜனானந்தா தியானத்தை வழி நடத்தினார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.சுவாமி சுத்தானந்த கிரி குருவின் மகத்துவம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.புஷ்பாஞ்சலியுடன் விழா நிறைவு பெற்றது.