காஞ்சிபுரம், ஜூலை 28:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் அமைந்துள்ளது பழமையான வடவாயிற் செல்வி துர்க்கையம்மன் கோயில். இக்கோயிலின் 35 வது ஆண்டு ஆடிப்பூர பால்க்குட ஊர்வலத்தையொட்டி பஜார் வீதியில் முத்துப் பிள்ளையார் கோயிலில் இருந்து 501 பெண் பக்தர்கள் பால்க்குடங்களை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்து சேர்ந்தனர்.
பின்னர் பெண்கள் தங்களது கரங்களாலேயே மூலவர் துர்க்கை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தும் வழிபட்டனர். சிறப்பு தீபாராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், ஐந்து தெரு நாட்டாண்மை தாரர்கள்,துர்க்கையம்மன் வார வழிபாடு மன்றம்,மகளிர் வார வழிபாடு மன்றம் மற்றும் உத்தரமேரூர் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.