காஞ்சிபுரம், ஆக.13:
காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையில் அமைந்துள்ள நாக கன்னியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழாவையொட்டி உற்சவர் நாக கன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் புதன்கிழமை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையில் அமைந்துள்ளது நாக கன்னியம்மன் ஆலயம்.இக்கோயிலின் 44 வது ஆண்டு ஆடித்திருவிழாவையொட்டி காலையில் ஜலம் திரட்டுதல் நிகழ்வும்,மதியம் அம்பாள் வர்ணிப்பும்,கூழ்வார்த்தல் நிகழ்வுகளும் நடைபெற்றன.மாலையில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டும் தரிசனம் செய்தனர்.
இரவு உற்சவர் நாக கன்னியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.