காஞ்சிபுரம், ஆக.12:
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் மகா சங்கட ஹர சதுர்த்தியையொட்டி செவ்வாய்க்கிழமை கலசபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ளது 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில்.இக்கோயிலில் மகா சங்கட ஹர சதுர்த்தியையொட்டி காலையில் கலசபூஜை நடைபெற்று மூலவருக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மகா கணபதி ஹோமும்,சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு மூலவர் விருட்ச விநாயகரை தரிசித்தனர்.