சனிபகவான் உருவாக்கும் திரிகேச யோகம்
ஜோதிட சாஸ்திரங்களின்படி நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. கிரகங்கள் இப்படி ராசியை மாற்றும் பொழுது அந்த ராசியில் ஏற்கனவே பயணித்து வரும் பிற கிரகங்களுடன் இணைந்து யோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகங்கள் சுபயோகங்களாகவும், அசுப யோகங்களாகவும் இருக்கின்றன.
திரிகேச ராஜ யோகம் என்றால் என்ன?
திரிகேச ராஜ யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில், 6, 8, 12 ஆகிய வீடுகளின் அதிபதிகள் இணைந்தோ அல்லது ஒருவரையொருவர் பார்த்தோ பலம் பெறும் ஒரு யோகமாகும். இது பொதுவாக விபரீத ராஜயோகம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களையும், வெற்றிகளையும் தரக்கூடியது. அந்த வகையில் சனிபகவான் தற்போது திரிகேச யோகத்தை உருவாக்குகிறார்.
திரிகேச யோகத்தால் பலன் பெறும் ராசிகள்
சனி பகவான் கோபக்கார கிரகமாகவும், மோசமான பலன்களை தருபராகவும் அறியப்படுகிறார். ஆனால் அவர் ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமரும்போது ராஜ யோகத்தை உருவாக்கி அவர்கள் வாழ்வில் பல வெற்றிகளை கொடுக்கிறார். அப்படி ஒரு ராஜயோகத்தை தற்போது சனி பகவான் உருவாக்குகிறார்.
சனி பகவான் பொதுவாக ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்குகிறார். தற்போது மீன ராசியில் இருக்கிறார். இதே நேரத்தில் அவர் திரிகேச யோகத்தை உருவாக்குகிறார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி உருவாகும் இந்த யோகம் மூன்று ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரவுள்ளது.
இந்த யோகம், கீழ்க்கண்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரவுள்ளது.
விருச்சிகம் (Viruchigam) -Scorpio
சனிபகவானின் திரிகேச யோகத்தால் பல நன்மைகளை பெற இருக்கும் ராசிகளில் முதலாவதாக இருப்பவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். இந்த காலகட்டத்தில் விருச்சக ராசியின் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் இருக்கிறார். இதன் காரணமாக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கவுள்ளது.
வேலை சம்பந்தமான பயணங்கள் ஏற்படும். இந்த பயணங்களால் உங்களுக்கு லாபங்களும், நிதி ஆதாயங்களும் ஏற்படலாம். வேலை செய்யும் இடங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். சகோதர சகோதரிகளுடன் உறவு வலுப்படும்.
சனி பகவானின் பூரண ஆசீர்வாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்க உள்ளதால் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் அவர்கள் மேம்பட உள்ளனர்.
கடகம் (Kadagam) - Cancer
கடக ராசி காரர்களுக்கு திரிகேச யோகம் வாழ்வில் மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வரவுள்ளது. அவர்கள் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை அடைய இருக்கின்றனர். வருமானத்தில் வியக்கத்தக்க அதிகரிப்பு ஏற்பட இருக்கிறது. இதுவரை நிலவி வந்த சொத்துப் பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து வருமானம் பன்மடங்காக பெருகும். பல வழிகளில் இருந்தும் பணம் வர வாய்ப்பு உள்ளது.
பொருளாதார நிலைமை மேம்படும். நிதிநிலைமை வலுப்பெறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதிய முதலீடுகள் செய்வதற்கு உகந்த நேரமாகும்.
தேங்கி நின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீங்கள் சந்திக்கும் புதிய நபர்கள் மூலம் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வியாபாரத்தை விரிவு செய்யவும் சாதகமான காலம் நெருங்கி உள்ளது. வேலையில்லாமல் தவித்து வந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
கும்பம் (Kumbam)- Aquarius
இந்தத் திரிகேச ராஜ யோகம் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றத்தை கொண்டுவர உள்ளது. வாழ்க்கையின் உச்சத்திற்கே கும்ப ராசிக்காரர்கள் செல்ல உள்ளனர்.
இந்த ராஜ யோகம் காரணமாக சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களிடம் இருந்து அன்பும், மரியாதையும் பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய விஷயங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய திட்டங்கள், முதலீடுகளைத் தொடங்க சரியான நேரம் இதுவாகும். நீங்கள் ஏற்கனவே செய்திருந்த முதலீடுகள் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள், தடங்கல்கள் முடிவுக்கு வரும். புதிய முதலீடுகளை தொடங்கவும், தொழிலை விரிவாக்கவும் நல்ல சூழல் நெருங்கியுள்ளது. சனிபகவான் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிம்மதியையும் முன்னேற்றத்தையும் தர இருக்கிறார்.
(பொறுப்பு துறப்பு: நமது ஜோதிட சேவைகள் மற்றும் கட்டுரைகள் பொதுவான பொதுநல வழிகாட்டுதலாக மட்டுமே கருதப்பட வேண்டும். அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையிலானவை மட்டுமே. இந்த பலன்கள் அனைத்தும் பொதுவானவை. தனிப்பட்ட ஜாதகம், கிரக நிலைகள், தசா புத்தி மற்றும் அமைப்பை பொறுத்து பலன்கள் மாறுபடும். எனவே, குறிப்பிட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன், தனிப்பட்ட ஜாதக ஆலோசனையை பெறுவது நன்மை.)