காஞ்சிபுரம், ஆக.12:
காஞ்சிபுரம் வடிவுடையம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை உற்சவர் வடிவுடையம்மன் ஊஞ்சலில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் வடிவுடையம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாலையில் உற்சவர் வடிவுடையம்மன் விநாயகர், முருகன் ஆகியோரை மடியில் வைத்துக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றதுடன் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.