காஞ்சிபுரம், ஆகஸ்ட் 4:
திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பம்பை சிலம்பு ஆட்டம், பேண்ட் வாத்தியங்கள், வானவேடிக்கைகளுடன் திருவீதி உலா நடந்து, பக்தர்கள் தீபா ஆராதனை செய்து வழிபட்டனர்.
விழாவில், அமைப்புச் செயலாளர் கே. கோபால், அவைத்தலைவர் ஜோதி ராமன், மாவட்ட பொருளாளர் ஏ. வஜ்ரவேலு, துணைச் செயலாளர் ஷகிலா, பேரூராட்சி செயலாளர் ஜெயகாந்தன், நிக்சன் எம்ஜிஆர் மன்றம் பூக்கடை ஜகா, பொதுக்குழு உறுப்பினர் ஏ. பழனி, ஒன்றிய செயலாளர்கள் அருண், கோவிந்தராஜ், மாகறல் சசி, வல்லம் பழனி, சந்திரசேகர், கலியனூர் தேவன், டில்லி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.