காஞ்சிபுரம், அக்.29:
மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்.இங்குள்ள காமாட்சி அம்மனை வழிபட்டால் ஒரே நேரத்தில் மகாலட்சுமி,சரஸ்வதி,துர்க்கை ஆகிய மூவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் பெருமைக்குரியது இக்கோயில்.
மாதம் தோறும் வரும் அஷ்டமி தினத்தையொட்டி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்துக்கு பெண்கள் பலரும் ஆயிரம் அகல்விளக்கு ஏற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைக் காட்சி நடைபெறுகிறது.
ஐப்பசி மாத அஷ்டமி தினத்தையொட்டி லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து வசந்த மண்டபத்திற்கு மங்கல மேள வாத்தியங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
காமாட்சி அம்மன் வசந்த மண்டபத்துக்கு வருவதற்கு முன்னதாக பெண்கள் பலரும் அகல்விளக்குகளை ஏற்றி சுவாமியை தரிசனம் செய்தனர். சிறப்பு தீபாராதனைகளுக்குப் பிறகு அம்மன் மீண்டும் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர்,மணியக்காரர் சூரியநாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.
.png)