Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா - சிறப்பு அலங்காரத்தில் சண்முகப்பெருமான் காட்சி


காஞ்சிபுரம், அக்.23:

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியனவற்றில் கந்தசஷ்டித் திருவிழாவின் 2 வது நாள் நிகழ்வாக வியாழக்கிழமை சண்முகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.



பெரியகாஞ்சிபுரத்தில் நெமந்தக்காரத்தெருவில் அமைந்துள்ளது பழனி ஆண்டவர் திருக்கோயில். இக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழாவின் 2 வது நாள் நிகழ்வாக காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.



ஆலயவளாகத்தில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமான் மஞ்சள் நிற பூக்களால் அலங்கரிக் கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் புலிவாகனத்தில் முருகப்பெருமான் வீதிஉலாவும், சிங்கமுகாசுரன் வதமும் நடைபெற்றது.


காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் 2 வது நாள் நிகழ்வாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. 


வள்ளி,தெய்வானை சமேத சண்முகப்பெருமான் வெள்ளைச்சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் பூஜகர் காமேசுவர சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் லட்சார்ச்சனை நடத்தினார்கள். 


சண்முகப் பெருமானுக்கு 6 பூஜகர்கள் ஒன்றாக இணைந்து சிறப்பு தீபாராதனையும் நடத்தினார்கள்.பக்தர்களுக்கு லட்சார்ச்சனை செய்த பிரசாதமும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.


📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.