காஞ்சிபுரம், அக்.3:
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் கார்வண்ணப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் சங்கடஹர ஆஞ்சநேயருக்கென புதியதாக சந்நிதி கட்டப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த செப்.29 ஆம் தேதி தொடங்கியது.வெள்ளிக்கிழமை கோ.பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று வேதவிற்பன்னர்களால் ஆஞ்சநேயருக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.