காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற சிறப்பு பெற்றது.
தேவர்களுக்கு தீங்கிழைத்து வந்த வல்லன் எனும் அசுரனை அழித்து முருகப்பெருமான் எழுந்தருளியதால் வல்லக்கோட்டை என்று வழங்கப்படும் இத்தலத்திற்குக் கிருத்திகை, விசாகம், சஷ்டி, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் வந்து வழிபடுவோருக்கு சொந்த வீடுமனை, திருமணம், பதவி உயர்வு, வளமான வாழ்வு கிடைப்பதாக ஐதீகம்.
தேவர்களின் பொருட்டு வல்லன் எனும் அசுரனை இத்தலத்தில் முருகப்பெருமான் அழித்து காட்சியருளியதால் இங்கு சூரசம்கார உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
6 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தலத்தில் கந்தசஷ்டி உற்சவம் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு மகா அபிஷேகமும் உற்சவர் ஆறுமுகப்பெருமானுக்கு சத்ருசம்கார திரிசதீ அர்ச்சனை, விசேஷ யாகபூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி நாள்தோறும் வெவ்வேறு அலங்காரங்களில் காட்சியளித்து வருகிறார். முதல்நாள் உற்சவத்தன்று பச்சைசாத்தி அலங்காரத்திலும் இரண்டாம்நாள் வெள்ளைசாத்தி அலங்காரத்திலும் மூன்றாம் நாள் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும் நான்காம் நாள் வாடாமல்லி வண்ண அலங்காரத்திலும் காட்சியளித்தார்.
ஐந்தாம் நாளாகிய ஞாயிறன்று காலையில் மூலவருக்கு மகா அபிஷேகமும் சண்முகருக்கு சத்ருசம்கார திரிசதீ அர்ச்சனையும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. சுப்பிரமணியர் மஞ்சள்சாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மாலை 4 மணிக்கு சுப்பிரமணியர் வேல் வாங்கும் நிகழ்வுக்காக வல்லம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சடையீஸ்வரர் திருக்கோயிலுக்கு எழுந்தருளினார். இந்த உற்சவத்திற்காக அத்திருக்கோயில் முழுதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
மாலை 6 மணிக்கு அருள்மிகு சைனாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. அம்பாள் அருகில் வேல் வைத்து சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. மகா மண்டபத்தில் பலவித பொருட்களால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பிறகு அம்பாளிடம் பூஜிக்கப்பட்ட வேலினை அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓதியவாறு முருகப்பெருமானிடம் அளித்தனர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா என்று பக்தர்கள் கோஷமிட்டனர்.
அன்னையிடம் சக்திவேல் பெற்ற முருகப்பெருமான் சூரனை வதஞ்செய்திடும் தோரணையுடன் பின்னர் வல்லம் திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு திருப்பெரும்புதூர் ஒரகடம் நெடுஞ்சாலை வழியாக வல்லக்கோட்டைக்கு வீதி உலாவாக சென்றார்.
ஞாயிறன்று விடுமுறை தினமென்பதால் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வல்லக்கோட்டைக்கு வந்தனர். கந்த சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் திருக்கோயிலை 18 முறை வலம்வந்து வணங்கினர். ஏராளமான பக்தர்கள் திருக்கோயில் பிரகாரத்தில் அமர்ந்து திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். மாலையில் மயில் மண்டபத்தில் பள்ளி மாணவர்களின் பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
உற்சவத்திற்கு வருகைதந்த பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் முருகப்பெருமானுக்குப் படைக்கப்பட்ட ஆறுவகை பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
சஷ்டி உற்சவத்தின் சிகரமாக திங்களன்று மாலை 5.30 மணிக்கு சூரசம்காரமும் செவ்வாயன்று கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.
உற்சவத்தை முன்னிட்டு திருக்கோயிலில் புதியதாக சூரவாகனம் செய்யப்பட்டுள்ளது. புதிய சூரவாகனத்திற்கு ஞாயிறன்று காலையில் பூஜைகள் செய்யப்பட்டு வல்லக்கோட்டை கிராமத்தில் கரிக்கோல ஊர்வலமாக வண்டியில் எடுத்து செல்லப்பட்டது.
6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கந்தசஷ்டி சூரசம்கார உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்கள் அறிவுரையின்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் செய்துள்ளனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
.png)