காஞ்சிபுரம், அக்.27:
காஞ்சிபுரம் நெமந்தக்காரத்தெருவில் அமைந்துள்ளது பழனி ஆண்டவர் திருக்கோயில்.இக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா இம்மாதம் 22 ஆம் தேதி காப்புக்கட்டுதல் உற்சவத்துடன் தொடங்கியது.விழா நடைபெற்ற 6 நாட்களும் தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
ஆலயம் அருகில் உள்ள மண்டபத்தில் தினசரி உற்சவர் சண்முகர் வண்ணமலர் அலங்காரத்திலும் உற்சவர் தண்டாயுதபாணி தினசரி வெவ்வேறு வாகனத்தில் அலங்காரமாகி வீதியுலா வந்தார்.சிங்க முகாசுரன்,அக்னி முருகன் உள்ளிட்ட வதமும் தினசரி நடைபெற்றது.
விழாவின் 5 வது நாள் நிகழ்வாக நெமந்தக்கார ஒத்தவாடைத்தெருவில் அமைந்துள்ள அமரேஸ்வரர் ஆலயத்திலிருந்து 108 பெண்கள் பால்குடமாக எடுத்து வந்து மூலவருக்கு அவரவர்களது கரங்களாலேயே பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா வந்து பானுகோபனை வதம் செய்தார்.திங்கள் கிழமை சூரசம்ஹாரத் திருவிழாவையொட்டி காலையில் ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் அமைந்துள்ள அரசகாத்த அம்மன் ஆலயத்திலிருந்து அம்மனிடம் சக்தி வேல்வாங்கும் நிகழ்ச்சியும், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜி.கேசவன் என்ற இளைஞர் முருகன் வேடம் தரித்து சூரனை வதம் செய்வது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
உற்சவர் சண்முகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து வீரவாகு தூது செல்லும் நிகழ்வும்,அசுரர்களை அழிக்கும் சூரசம்ஹார நிகழ்வும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்வை காண வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
.png)