காஞ்சிபுரம், நவ.1:
அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் வளாகத்தில் ரூ.3.64 லட்சம் மதிப்பில் திருக்கோயில் நிதியிலிருந்து தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி அமைக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் வரதராஜ சுவாமி கோயில் வரலாறு,சிறப்பம்சங்கள்,ஆலயத்தில் உள்ள இதர சந்நிதிகள் உள்ளிட்ட முழு விபரங்களையும் தொடுதிரை மூலமாக எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
இதே தொடுதிரை வசதியில் மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களின் முகவரிகள்,திறந்திருக்கும் நேரம் மற்றும் நடை சாற்றப்படும் நேரம் உள்ளிட்டவற்றையும் தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக தங்கள் பயணத்தை திட்டமிட முயலக்கூடிய வகையில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தொடுதிரை வசதியுடைய தகவல் பெட்டியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், கோயில் உதவி ஆணையர் ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள்,கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
.png)