காஞ்சிபுரம், டிச.6:
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பதியில் முகாமிட்டிருந்தனர்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
இருவரும் காஞ்சிபுரம் திரும்பியதை தொடர்ந்து நகர் எல்லையான சர்வதீர்த்தக்குளம் அருகில் உள்ள தவளேசுவரர் கோயில் முன்பாக மங்கல மேள வாத்தியங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரம்பரிய வழக்கப்படி தீர்த்த புரோகிதர் நீலகண்டசாஸ்திரிகள் தலைமையில் பூரண கும்ப மரியாதையும்,அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர்கள் சார்பிலும் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் சங்கர மடத்தின் நுழைவுவாயிலுக்கு வந்த இரு பீடாதிபதிகளுக்கும் ஸ்ரீமடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாதசாஸ்திரி ஆகியோர் பூரண கும்ப மரியாதை செய்தனர்.
இதனையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஏகாம்பரநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகத்திற்காக தீர்த்தம் எடுத்து வந்த சிவாச்சாரியார்களை சந்தித்து ஆசி வழங்கினார்.
நிகழ்வில் காஞ்சி காமாட்சி சங்கரமட வரவேற்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம், சங்கர மட வரவேற்புக் குழுவினர்களான டி.ஆர்.சுப்பிரமணியன்,பாபு,மோதிலால் ஆகியோர் உட்பட பலரும் பீடாதிபதிகளை வரவேற்றனர்.
.png)
