காஞ்சிபுரம், டிச.6
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் திருக்கோவில்.இக் கோவிலுக்கு தங்கத்தேர் செய்ய வேண்டுமென பக்தர்கள் பலரது கோரிக்கையையும் ஏற்று காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பணிச் செம்மல் மகாலட்சுமி சுப்பிரமணியம் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அவரது உத்தரவின்படி ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு தங்கத்தேர் செய்யப்பட்டது.தங்க தேரின் உயரம் 25 அடி 10 அடி அகலம் 13 அடி நீளம் 5 அடுக்குகளுடன் பிரம்மா தேரை ஓட்டுவது போல வடிவமைக்கப்பட்டது 1600 கன அடி பர்மா தேக்கு மரத்தால் இரண்டு டன் தாமிரத்தின் மீது தங்க ரேக்குகள் ஒட்டப்பட்டது.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
தங்கத்தேரில் 8 கந்தர்வர்கள் 16 நந்தி சிலைகள் நான்கு குதிரைகள் நான்கு மூலைகளிலும் நான்கு சாமரப் பெண்கள் உள்ளிட்டவை கலைநயத்துடன் தேரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள மகா ஸ்வாமி மணிமண்டபத்தில் 30க்கும் மேற்பட்ட சிற்பிகளால் செய்யப்பட்ட தங்கத்தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இத்தேரின் வெள்ளோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது ஒரிக்கை மகா சுவாமிகள் மணிமண்டபத்தில் இருந்து தங்கத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்றது.
வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர் .நீண்ட நேரம் காத்திருந்து தங்கத்தேரை தரிசித்தனர் தங்கத்தேர் வெள்ளோட்டத்தினை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
ஏற்பாடுகளை ஏகாம்பரநாதர் இறை பணி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். தங்கத்தேர் வெள்ளோட்டத்தின் போது ஆயிரத்துக்கு மேற்பட்ட மேற்பட்ட சிவ வாத்தியங்கள் இசைத்தபடியும் சென்றனர்
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி மாணவர்கள், தீயணைப்புத்துறை காவல்துறை மின்வாரியம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தங்கத்தேர் வெள்ளோட்ட விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
.png)
