காஞ்சிபுரம், டிச.5:
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி ஜெம்நகரில் அமைந்துள்ள செல்வவிநாயகர் கோயில் 9 ஆம் ஆண்டு நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதி ஜெம்நகரில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் திருக்கோயில்.
இக்கோயில் மகா கும்பாபிஷேகம் 9 ஆம் ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து காலையில் கணபதி ஹோமம் மற்றும் கலச பூஜை ஆகியனவும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவர் கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
மதியம் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஆண்டு விழாவையொட்டி மூலவர் செல்வ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
.png)