காஞ்சிபுரம் | டிசம்பர் 31, 2025
தங்கக்கவச அலங்காரம்:
புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை (ஜனவரி 1) அதிகாலையிலேயே மூலவருக்குச் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து, மூலவர் ஸ்ரீ ராஜகுபேரர் ஜொலிஜொலிக்கும் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
தரிசனப் பாதை மாற்றம்:
பக்தர்கள் கூட்ட நெரிசலின்றிச் சுலபமாகத் தரிசனம் செய்ய ஏதுவாகப் புதிய வழிமுறைகளை ஆலய நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் அறிவித்துள்ளார்.
அதன்படி:
- பக்தர்கள் பில்லாபோங் பள்ளி (Billabong School) வழியாக ஆலயத்திற்கு உள்ளே வந்து தரிசனம் செய்ய வேண்டும்.
- தரிசனம் முடிந்த பின், ஆலயத்தின் சந்நிதி தெரு வழியாக வெளியே செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
புத்தாண்டு தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், எவ்வித இடையூறுமின்றி சுவாமி தரிசனம் செய்யப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும் நிர்வாக அறங்காவலர் தெரிவித்துள்ளார்.
.png)