வேலூர், டிசம்பர் 19:
✨ வேலூர் கொசபேட்டை வீர ஆஞ்சநேயர் கோயில்:
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வேலூர் கொசபேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வீர ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ஆஞ்சநேயர் சுவாமிக்குச் சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் வடை மாலை சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
🌕 ஆனைகுளத்தம்மன் கோயில் - ஊஞ்சல் சேவை:
அமாவாசையை முன்னிட்டு வேலூர் ஆனைகுளத்தம்மன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இன்று சிவன், விஷ்ணு மற்றும் ஐயப்பன் ஆகிய மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிகளுக்குப் பிரம்மாண்டமான ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பக்திப் பாடல்கள் மற்றும் மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
.png)
