காஞ்சிபுரம் | ஜனவரி 6, 2026 :
அகத்தியர் - லோபமுத்திரை வழிபாடு:
இத்திருக்கோயிலில் அகத்திய முனிவரும், அவரது மனைவி லோபமுத்திரை அம்பிகையும் தனிச் சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். அகத்தியர் அவதரித்த ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி, இன்று காலையில் இருவருக்கும் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
சந்தன அலங்காரம்:
அபிஷேகத்தைத் தொடர்ந்து, அகத்தியர் மற்றும் லோபமுத்திரை அம்பிகைக்கு நறுமணமிக்க சந்தன அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைகள் நடைபெற்றன. ஆயில்ய நட்சத்திர நாளில் அகத்தியரைத் தரிசித்தால் திருமணத் தடைகள் நீங்கும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அன்னதானம்:
இந்த விசேஷ வழிபாட்டில் கிளார் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
.png)