Type Here to Get Search Results !

தம்பதியரின் ஜாதகப் பொருத்தம் விளக்கம்


முன்னதாக ஜாதகப்பொருத்தம் பார்த்தோம் அதில் உத்தமம் மத்திமம் அதமம் என மூன்று வகையான தகுதிகளில் பார்க்க வேண்டும் என அறிந்தோம். அதன் விவரங்கள் ஜாதகப்பொருத்தம் என்பது 12 பொருத்தங்கள் அவசியம்...

1. ஆண், பெண் ஜாதக சுப-பாவநிலைப் பொருத்தம்.
2. லக்னப்பொருத்தம்
3. இராசிப்பொருத்தம்
4. லக்னாதிபதிப் பொருத்தம்
5. இராசியாதிபதிப் பொருத்தம்
6. விதிவழிப் பொருத்தம்
7. உறவுகளில்ப் பொருத்தம்
8. ஆயுள் பொருத்தம்
9. புத்ரபாவ பொருத்தம்
10. செவ்வாய் தோஷ பொருத்தம்
11. நாக தோஷப் பொருத்தம்
12. கூட்டு கிரக பொருத்தம்
ஆகியவை மிக மிக முக்கியமாக பார்க்கப்பட வேண்டும். ஜென்ம நட்சத்திரப் பொருத்தங்களைவிட ஜாதகப் பொருத்தம் சரியாக அமையாவிட்டால் அந்த தம்பதியருக்குத் திருமணம் செய்து வைக்கக்கூடாது. மேற்கூறிய 12 பொருத்தங்களை பார்ப்து எப்படி என பார்ப்போம்.

1. ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் 8 அல்லது 9 பலமாக இருந்தால் அது சுபநிலை ஜாதகப் பொருத்தமாகும். அதுவே 2 அல்லது 3 கிரகங்கள் பலமாக இருந்தால் அது பாவநிலைப் பொருத்தமாகும். பாவநிலைப் பொருத்தம் வந்தால் பொருத்தம் இல்லை என அறிய வேண்டும்.

2. பெண் லக்னமும், ஆண் லக்னமும் ஒன்றுக்கொன்று நட்பு லக்னமானால் இப்பொருத்தம் உண்டு.

3. பெண் இராசியும், ஆண் இராசியும் நட்பானால் இப்பொருத்தம் உண்டு என அறியவும்

4. பெண் லக்னாதிபதியும் ஆண் லக்னாதிபதியும் நட்பானால் இப்பொருத்தம் உண்டு.

5. பெண் இராசியாதிபதியும், ஆண் இராசியாதிபதியும் நட்பானால் இப்பொருத்தம் உண்டு.

6. ஜாதகப் பொருதங்களில் மிக மிக முக்கியமானது விதி வழிப் பொருத்தமாகும். ஒரு ஜாதகத்தில் மனைவி (அ) கணவரின் பல வித அம்சங்களை அறிய 7ஆம் வீட்டையும், 7ஆம் அதிபதியையும், சுக்ரன், குரு முதலானோரின் நிலைமமையும் ஆராய்ந்து பார்த்து தான் முடிவுக்கு வர வேண்டும்.

7. உறவு நிலைப் பொருத்தம் ஒரு ஜாதகர் (எ) ஜாதகி எவ்வளவு தூரம் பாசமாக இருப்பார்கள் என்பது லக்னாதிபதி, 7ஆம் அதிபதி நட்பினால் இப்பொருத்தம் உண்டு என அறியவும்.

8. ஆயுள் பொருத்தம் என்பது மிகவும் முக்கியம். தீர்காயிசு உடைய ஒரு பெண்ணுக்கு அற்பாயுள் உடைய ஒரு ஆணை மணம் செய்வது என்ன பிரயோஜனம்? எனவே லக்னம், எட்டாம் பாவம், சனி, 10ஆம் பாவம், சூரியன் முதலானவர்களை ஆராய்ந்து முடிவு செய்யப்பட வேண்டும்.

9. புத்திர பாவ பொருத்தம் பார்க்கும் போது 5ஆம் பாவம், அதன் அதிபதி குரு ஆகியோரை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுத்து உத்தமம்.

10. செவ்வாய் தோஷ பொருத்தம் பார்க்கும் போது 2, 4, 7, 8, 12 ஈகிய வீடுகளில் செவ்வாய் இருப்பது செவ்வாய், சனி சேர்ககை லக்ன ரீதியாகவும், சந்திரா லக்ன ரீதியாகவும் மேற்உறிய இடங்களில் இருந்தாலும் தோஷம் ஆகும்.

11. நாக தோஷப் பொருத்தம் பார்க்கும் போது 2, 4, 5, 7, 8, 12ல் ராகு (அ) கேது இருப்பது நாக தோஷமாகும் இதையும் லக்னம் ரீதியாகவும் சந்திர லக்ன ரீதியாகவும் பார்க்கப்பட வேண்டும். செவ்வாய் தோஷம், நாகதோஷம் ஆண், பெண் இருவரின் ஜாதகத்திலும் இருந்தால் நல்ல பொருத்தமாகும். இது உத்தமம் ஆகும்.

12. கூட்டு கிரக பொருத்தம் என்பது ஆண் (அ) பெண் இருவரின் ஜாதகத்திலும் லக்னாதிபதியுடன் 6-7 கிரகங்களின் சம்மந்தமோ (அ) பார்வையோ இருந்தால் உத்தமம் மாறாக மூன்று மூன்று கிரகங்களாக கூடி மூன்று கிரக கூட்டம் இருந்தால் இது பாவ கூட்டமாகும் இப்படி இருப்பது பொருத்தம் கிடையாது என எடுத்துக் கொள்ளவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.