1) அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன் எந்த காரியத்தையும் செம்மையாகச் செய்து முடிப்பான்
2) பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தன் பெற்றொருக்கு நல்ல பிள்ளையாக நடப்பான்
3) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவன் சாதுர்யமான பேச்சுத்திறமையைப் பெற்று இருப்பான்,
4) ரோகிணி, நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான்,
5) மிருகசீர்ஷம், நட்சத்திரத்தில் பிறந்தவன் எப்போதும் சுறுசுறுப்பு உடையவனாய் இருப்பான்
6) திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் எதிலும் கண்ணியம் வாய்ந்தவனாய் இருப்பான்
7) புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவன்வக்கீல்களைப் போல வல்லவனாய் இருப்பான்,
8) பூசம், நட்சத்திரத்தில் பிறந்தவன் பகைவருக்குப் பயப்படமாட்டான்,
9) ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவன் பகைவருக்கு பகையாய் இருப்பான்,
10) மகா நட்சத்திரத்தில் பிறந்தவன் சுற்றுப்பயணங்களிள் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
11) பூரம். நட்சத்திரத்தில் பிறந்தவன் கல்வியில் ஆர்வம் உடையவனாய் இருப்பான்.
12) உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவன் பெண்களிடம் விருப்பம் உள்ளவனாய் இருப்பான்.
13) ஹஸ்தம், நட்சத்திரத்தில் பிறந்தவன் குரு வினிடத்தில் பக்திஉள்ளவனாய் இருப்பான்.
14) சித்திரை.நட்சத்திரத்தில் பிறந்தவன் சிறிது முன் கோபக்காரனாய் உள்ளவனாய் இருப்பான்.
15) சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் உணவில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
16) விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவன் நல்ல நீதிமானாக விளங்குவான் உள்ளவனாய் இருப்பான்.
17) அனுஷம், நட்சத்திரத்தில் பிறந்தவன் புகழைத் தேடிக் கொள்ள ஆசைப்படுவான்
18) கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவன் பக்திமானாக விளங்குவான்
19) மூலம், நட்சத்திரத்தில் பிறந்தவன் ஆன்மீகத் துறையில் முன்னேற்றம் உள்ளவனாய் இருப்பான்.
20) பூராடம், நட்சத்திரத்தில் பிறந்தவன் தன்னை அடுத்தவரைக்காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவனாய் இருப்பான்.
21) உத்திராடம், நட்சத்திரத்தில் பிறந்தவன்தன் சுற்றத்தார் நலனில் அக்கறை கொண்டவனாய் இருப்பான்
22) திருவோணம், நட்சத்திரத்தில் பிறந்தவன் எப்போதும் உற்சாகம் உடையவனாய் இருப்பான்.
23) அவிட்டம், நட்சத்திரத்தில் பிறந்தவன் தியாகக் குணம் படைத்தவனாய் இருப்பான்
24) சதயம், நட்சத்திரத்தில் பிறந்தவன் பொய் பேச விரும்பமாட்டான்.
25) பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறர் சொல்பொறுக்காதவனாய் இருப்பான்.
26) உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் நல்லவர்களுக்கு நல்லவனாகவும்.பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவனாகவும் விளங்குவான்.
27) ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறர் பேச்சைக் கேட்பவனாக இருப்பான்.
28) அபிஷித்து நட்சத்திரத்தில் பிறந்தவன் சேன்மம் தெரியாது இருப்பான்.