பெயர் இராசிபொருத்தம், ஜென்ம நட்சத்திரப் பொருத்தம் எனும் வரிசையில் 11
பொருத்தங்கள் பார்த்தோம் அல்லவா- இதனை அடுத்து ஜாதகப்பொருத்தம் பார்ப்பது
பற்றிப் பார்ப்போம்:
இதற்கு முன்பு பா¢ரத்த 11 பொருத்தங்களைவிட ஜாதகப்பொருத்மே மிக முக்கியம். ஜாதகப்பொருத்தம் சரியாக அமையாவிட்டால், அந்த தம்பதியருக்குத் திருமணம் செய்துவைக்கக்கூடாது.
ஜாதகப்பொருத்தம் நன்றாக அமைந்திருந்து, தம்பதியரின் பெயர் ராசிப்பொருத்தம், ஜென்மநட்சத்திரப் பொருத்தம் சரியாக அமையாவிட்டாலும். அந்தத் தம்பதியினருக்குத் திருமணம் செய்து வைக்கலாம். இவர்கள் ஒரளவு சந்தோஷமாக வாழ்வார்கள்.
முன்பு கூறிய 11பொருத்தங்களில் ஒரு ஐந்து பொருத்தங்களோடு இந்த ஜாதகப்பொருத்தங்களும் நன்றாக அமைந்திருந்தால் இந்த தம்பதியினர் பூரண தீர்க்காயுசுடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.
இனி, ஜாதகப்பொருத்தம் எப்படி பார்ப்பது என்பது பற்றிப்பார்ப்போம்:
ஆண் ஜாதகம் உத்தமமாக இருந்து பெண் ஜாதகம் மத்தமமாக வந்தால் நல்லது தான் திருமணம் செய்துவைக்கலாம்.
ஆண் ஜாதகம் உத்தமமாக இருநது பெண் ஜாதகம் அதமமாக வந்தால் திருமணம் செய்யகூடாது. அப்படி செய்து வைத்தால் இவர்கள் சில மாதங்களில் பிரிந்து விடுவார்கள்.
ஆ¢ண் ஜாதகமும் பெண் ஜாதகமும் உத்தமமாக வந்தால் நல்லப்பொருத்தம்.
ஆண் ஜாதகமும் பெண் ஜாதகமும் மத்திமமாக வந்தால் சுமாரான பொருத்தமாகம்.
ஆண் ஜாதகமும் பெண் ஜாதகமும் அதமமாக வந்தால் திருமணம் செய்யலாம்.
ஆண் ஜாதகம் மத்திமம், பெண் ஜாதகம் அதமம் என வந்தால் நல்லதுதான். திருமணம் செய்துவைக்கலாம்.
பெண் உத்தமமாக வந்து ஆண் ஜாதகம் அதமமாக வந்தால் திருமணம் செய்யகூடாது.
ஆண் ஜாதகம் அதமமாக வந்து பெண் ஜாதகம் மத்தியமமாக வந்தால் சுமாரான பொருத்தமாகும்.