காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சி, தோண்டான்குளம் கிராம மணிகண்டீஸ்வரர் லிங்கம் 1350 வருடங்கள் பழமையானது
லிங்கத் திருமேனி வெட்ட வெளியில் இருப்பது கண்டு, கற்றளி கோவிலாக புதுப்பிக்க கால்கோள் பூஜை 28.10.2023 அன்று சிவனருள் பெற்றவர்களால் திருவாரூர் சிவ நடராஜன் அய்யா தலைமையில் நடத்தப்பட்டது
முன்னோர்களால் வழிபாடு செய்யப்பட்ட இவ்வாலயத்தில்
இறைவர்: மணிகண்டீசுவரர்.
இறைவி : அஞ்சனாட்சி அம்மை
என்றும் இங்குள்ள மணிகண்ட ஈசனை சிவனை
வழிபட்டோர்: பிரமன், திருமால், சனி, மற்றும் அனைத்து தேவர்கள் என்றும் நம்பப்படுகிறது.
இவ்வாலயம் அஞ்சனாட்சி உடனுறை மணிகண்டீஸ்வரர் ஆலயம் எனவும், மணிகண்டீசம் என்றும், சுவாமி மணிகண்டீசுவரர் ஆலயம் என்றும் திருநாமம் பெற்று விளங்குகிறது.
இத்திருப்பணியில் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் சேகர் ,கோவிலுக்கு நிலம் அளித்தவர்கள் கே.கோவிந்தப்பிள்ளை காமாட்சியம்மாள், கே.ராமசாமிப்பிள்ளை சரோஜாம்மாள் மற்றும் கே.ராஜாராம் பிள்ளை சுசிலா மற்றும் ஆலய திருப்பணி குழுவினர் T. R சீனிவாசன், T. R. முருகானந்தம், T S கோவிந்தராஜன், R. ஜோதிகாந்தன், Dr. D.ஏழுமலை, A. மதன்.
வரலாறு
பிரம்மன், திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் மணிகண்டீஸ்வரர்-ஐ வழிபட்டுள்ளனர்
மணிகண்டீஸ்வரர் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு பொதுவாக காணப்படுகிறது.
திருப்பாற்கடலை கடைந்தபோது தோன்றிய நஞ்சுவால் துயருற்று, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அந்நஞ்சை இறைவனுக்கு கொடுத்துண்ணுமாறு செய்த பாவம் நீங்கும்படி பிரமன், திருமால் முதலியோர் தங்களை காத்த இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம்-கழுத்து) போற்றி செய்யும் வகையில் "மணிகண்டம்" எனும் பெயரிலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டனரென்பது தல வரலாறாகும்.
சிவனருள் பெற்ற இவ்வூர் குளம் மனிதர்களால் தோண்டப் படாமலே சுவையான நீரூற்று பெற்று இயற்கையாகவே அமைந்ததன் பொருட்டு தோண்டா குளம் என்றும் பின் தோண்டாங்குளம் என்றும் மருவி வரலாற்று சிறப்புமிக்க வாரியம்பாக்கம் கிராமத்திற்கு கிழக்கே தெற்கு நோக்கியும் பாலாற்றங்கரைக்கு வடக்கேயும் அமையப் பெற்றுள்ளது.
வாரியம்பாக்கத்திற்கு தெற்கே இவ்வூரின் நீர்நிலை அமையப் பெற்றதனால் அங்குள்ள சிரிய ஏரி நீர்நிலைக்கு தென்னந்தாங்கல் என்று பேர் பெற்றதாகவும் முன்னோர்கள் வழி தெரிய வருகிறது