காஞ்சிபுரம், மார்ச் 7:
காஞ்சிபுரம் ராஜகுபேரன் கோயிலில் வியாழக்கிழமை தோறும் ராஜகுபேரனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. சிவராத்திரியையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
சிறப்பு அபிஷேகங்களை ராஜகுபேர சித்தர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அன்னதானமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பக்தர்களிடையே ராஜகுபேர சித்தர் பேசியது..சிவபெருமானிடம் இருந்து செல்வத்தின் அதிபதியாக வரம் பெற்றவர் ராஜகுபேரர். இவருக்கும் இக்கோயிலில் உள்ள மற்ற பரிவார தெய்வங்களுக்கும் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
இதற்கான யாகசாலை பூஜைகள் அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் முதல் நாள் ஏப்.20 ஆம் தேதி தொடங்குகிறது. மறுநாள் 21 ஆம் தேதி கோ.பூஜை மற்றும் மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் காலை 8.40 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறவுள்ளது.
பக்தர்கள் கும்பாபிஷேகப் பெருவிழாவிலும்,வியாழக்கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு வழிபாட்டிலும் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.