காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ மகா ருத்ரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஜூன்.17 ஆம் தேதி நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதி மாதனம்பாளையத்தெருவில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் உடனுறை மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில்.
இக்கோயிலில் மூலவராக மகா ருத்ரேஸ்வரரும், அதே கோயில் வளாகத்தில் மாணிக்க விநாயகரும் அருள்பாலித்து வருகின்றனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி இக்கோயிலுக்கு புதியதாக ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களின் சந்நிதிகளுக்கான கோபுரங்களும் புதியதாக கட்டப்பட்டுள்ளது.இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
வரும் 17 ஆம் தேதி காலை 6.40 மணிக்கு மாணிக்க விநாயகர் கோபுரத்துக்கு கும்பாபிஷேகமும்,இதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு மகா ருத்ரேசுவரருக்கு கும்பாபிஷேகமும் பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
மாலையில் மகாருத்ரேசுவரருக்கும், காமாட்சி அம்பிகைக்கும் திருக்கல்யாணமும், அதன் தொடர்ச்சியாக சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்குகிறார்.
விழா ஏற்பாடுகளை மாதனம்பாளையம் தெரு பொதுமக்கள்,சிவனடியார்கள் செய்து வருகின்றனர்.