Type Here to Get Search Results !

நாளைய (18-07-2024) ராசி பலன்கள்

 




குரோதி வருடம் ஆடி 2, வியாழக்கிழமை, July 18, 2024 பஞ்சாங்கம்
திதி : 08:44 PM வரை துவாதசி பின்னர் திரயோதசி
நட்சத்திரம் : கேட்டை 03:25 AM வரை பிறகு மூலம்
யோகம் : சுப்ரம் 06:12 AM வரை, அதன் பின் பராம்யம் 04:44 AM வரை, அதன் பின் மாஹேந்த்ரம்
கரணம் : பவம் 08:59 AM வரை பிறகு பாலவம் 08:44 PM வரை பிறகு கௌலவம்.

·         தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, ஆடி

·         நாள் - சம நோக்கு நாள்

·         பிறை - வளர்பிறை


திதி

·         சுக்ல பக்ஷ துவாதசி   - Jul 17 09:03 PM – Jul 18 08:44 PM

·         சுக்ல பக்ஷ திரயோதசி   - Jul 18 08:44 PM – Jul 19 07:41 PM

நட்சத்திரம்

·         கேட்டை - Jul 18 03:12 AM – Jul 19 03:25 AM

·         மூலம் - Jul 19 03:25 AM – Jul 20 02:55 AM

கரணம்

·         பவம் - Jul 17 09:03 PM – Jul 18 08:59 AM

·         பாலவம் - Jul 18 08:59 AM – Jul 18 08:44 PM

·         கௌலவம் - Jul 18 08:44 PM – Jul 19 08:18 AM

யோகம்

·         சுப்ரம் - Jul 17 07:04 AM – Jul 18 06:12 AM

·         பராம்யம் - Jul 18 06:12 AM – Jul 19 04:44 AM

·         மாஹேந்த்ரம் - Jul 19 04:44 AM – Jul 20 02:40 AM

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

·         சூரியோதயம் - 5:54 AM

·         சூரியஸ்தமம் - 6:35 PM

·         சந்திரௌதயம் - Jul 18 3:55 PM

·         சந்திராஸ்தமனம் - Jul 19 3:24 AM

அசுபமான காலம்

·         இராகு - 1:50 PM – 3:25 PM

·         எமகண்டம் - 5:54 AM – 7:30 AM

·         குளிகை - 9:05 AM – 10:40 AM

·         துரமுஹுர்த்தம் - 10:08 AM – 10:59 AM, 03:12 PM – 04:03 PM

·         தியாஜ்யம் - 08:51 AM – 10:28 AM

சுபமான காலம்

·         அபிஜித் காலம் - 11:49 AM – 12:40 PM

·         அமிர்த காலம் - 06:31 PM – 08:08 PM

·         பிரம்மா முகூர்த்தம் - 04:18 AM – 05:06 AM

ஆனந்ததி யோகம்

·         காலதண்ட Upto - 03:25 AM

·         தர்மம்

வாரசூலை

·         சூலம் - South

·         பரிகாரம் - தைலம்

சூர்யா ராசி

·         சூரியன் கடகம் ராசியில்

சந்திர ராசி

·         ஜூலை 19, 03:25 AM வரை விருச்சிகம் ராசி, பின்னர் தனுசு

சந்திர மாதம் / ஆண்டு

·         அமாந்த முறை - ஆஷாடம்

·         பூர்ணிமாந்த முறை - ஆஷாடம்

·         விக்கிரம ஆண்டு - 2081, பிங்கள

·         சக ஆண்டு - 1946, குரோதி

·         சக ஆண்டு (தேசிய காலண்டர்) - ஆஷாடம் 27, 1946

தமிழ் யோகம்

·         மரண யோகம் Upto - 03:25 AM

·         மரண யோகம்

சந்திராஷ்டமம்

·         1. Ashwini , Bharani , Krithika First 1 padam

பிற தகவல்

·         சந்திராஷ்டமம் - Patala (Nadir) upto 08:44 PM Prithvi (Earth)

·         Chandra Vasa - North upto Jul 19 - 03:25 AM East

·         Rahukala Vasa - தெற்கு

 


மேஷம்

செய்யும் முயற்சியில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். எதிராக இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் திடீர் திருப்பம் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சாந்தம் வேண்டிய நாள்.

அஸ்வினி : மாற்றமான நாள்.

பரணி : விவேகத்துடன் செயல்படவும். 

கிருத்திகை : சிந்தித்து முடிவெடுக்கவும். 




ரிஷபம்

குடுப்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு அதிகரிக்கும். எதிலும் தன்னபிக்கையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

கிருத்திகை : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 

ரோகிணி : தெளிவுகள் உண்டாகும். 

மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.



மிதுனம்

ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். போட்டி விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.

திருவாதிரை : கவனம் வேண்டும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.


கடகம்

ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். வருமான உயர்வு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். சிற்றின்ப செயல்களில் நாட்டம் ஏற்படும். குழந்தைகள் பற்றிய எண்ணம் மேம்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு நிறைந்த நாள்.

புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும். 

பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : நுட்பங்களை அறிவீர்கள்.


சிம்மம்

திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் மூலம் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வீடு மாற்றம் குறித்த எண்ணம் பிறக்கும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நலம் நிறைந்த நாள்.

மகம் : சேமிப்புகள் குறையும். 

பூரம் : அலைச்சல் உண்டாகும். 

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும். 


கன்னி

வெளி வட்டாரங்களில் மதிப்பு மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அறப்பணிகள் குறித்த செயல்திட்டத்தை அமைப்பீர்கள். மாற்று மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கும். உடற்பயிற்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.

உத்திரம் : மதிப்புகள் மேம்படும்.   

அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

சித்திரை : பிரச்சனைகள் குறையும். 


துலாம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். அசதி நிறைந்த நாள்.

சித்திரை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

சுவாதி : ஆதாயம் உண்டாகும்.

விசாகம் : செல்வாக்கு மேம்படும்.


விருச்சிகம்

இணையம் சார்ந்த துறையில் புதுமையான சூழல் ஏற்படும். வருங்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கலை துறையில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பக்தி நிறைந்த நாள்.

விசாகம் : புதுமையான நாள்.

அனுஷம் : தடைகள் மறையும்.

கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.


தனுசு

இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

மூலம் : தயக்கம் உண்டாகும்.

பூராடம் : மாற்றம் உண்டாகும்.

உத்திராடம் : புரிதல் ஏற்படும்.


மகரம்

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். மூத்த உடன்பிறந்தவர்களின் வழியில் சுப காரியங்கள் கைகூடும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

திருவோணம் : ஈடுபாடுகள் ஏற்படும்.

அவிட்டம் : இன்னல்கள் குறையும்.


கும்பம்

வியாபார பணிகளில் புதுமை ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறிகள் மறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். இறை சார்ந்த நம்பிக்கை மனதில் மேம்படும். கற்பித்தலில் சில மாற்றங்களை செய்வீர்கள். மருத்துவத் தொடர்பான துறைகளில் விவேகத்துடன் செயல்படவும். தனம் நிறைந்த நாள்.

அவிட்டம் : புதுமை ஏற்படும்.

சதயம் : தெளிவு பிறக்கும்.

பூரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும். 


மீனம்

உறவுகளின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். மனை விற்பனையில் ஏற்ற இறக்கமான சுழல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.

பூரட்டாதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 

உத்திரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.

ரேவதி : மதிப்புகள் அதிகரிக்கும். 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.