படவிளக்கம்: சுதர்சன ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சக்கரத்தாழ்வார்
காஞ்சிபுரம், ஜூலை 15:
காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தையொட்டி சுதர்சன ஜெயந்தி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வைணவத் திருக்கோயில்களில் 108ல் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அழகிய சிங்கப் பெருமாள் திருக்கோயில்.
இக்கோயிலில் தனி சந்நிதியாக எழுந்தருளியிருக்கும் சக்தரத்தாழ்வார் சந்நிதியில் ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தையொட்டி சுதர்சன ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது.
இதனையொட்டி ஆலயத்தில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு கோயில் பூஜகர் ராஜா பட்டாச்சாரியார் அவர்களால் சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
பின்னர் சக்கரத்தாழ்வார் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுதர்சன ஜெயந்தி உற்சவத்தின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.