காஞ்சிபுரம் :
பழமையும்,பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளும் உடையது காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம் மாகறலில் அமைந்துள்ள திருபுவனநாயகி சமேத திருமாகறலீசுவரர் திருக்கோயில்.
எலும்பு முறிவுகளால் அவதிப்படுவோர் இக்கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசித்தால் விரைவில் குணமடைவதாகவும் நம்பப்படுகிறது.இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் தொடங்கின.
மகா கும்பாபிஷேகம் நாளை வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
மாலையில் திருபுவன நாயகிக்கும் திருமாகறலீசுவரருக்கும் திருக்கல்யாண வைபவமும் அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பெ.கதிரவன்,தக்கார் வஜ்ரவேலு ஆகியோர் தலைமையில் கோயில் பூஜகர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.